பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 137 சமத்துவம்.சகோதரத்துவம் என்று சொல்கிறார்களே அந்த ஒருநிகர் நெறியும் உடன் பிறப்பு நீர்மையும் மக்க ளிடையே நடைமுறையில் வளர வேண்டுமென வற்புறுத் தினார் நானக். ஒருமைப்பாடு - ஒருமைப்பாடு என்று இப் பொழுது கரடியாய்க் கத்துகின்றார்களே-இந்த ஒருமைப் பாட்டின் இன்றியமையாமையை அப்போதே பறை சாற்றினார் நானக். மாற்றார் கொள்கையையும் ஆய்ந்து உண்மை காணவேண்டும் என்பது இவரது கருத்து. மக்களின் உலக வாழ்க்கை அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நானக் எடுத்துக்காட்டியுள்ள உவமை (ஒப்புமை) மிகவும் சுவைக்கத்தக்கது. அந்த உவமை தாமரை இலைதான். தண்ணிரின் நடுவே தாமரை இலைகள் இருப்பினும் அவை தண்ணிரோடு ஒட்டமாட்டா : பசையிற்றுப் பிரிந்தே காணப்படும். அதுபோல, மக்கள், உலகப் பற்றுப் பிணிப்புகட்கிடையே வாழினும், உண்மை யில் அந்தப் பற்றுப்பிணிப்பில் அந்தப் பந்த பாசத்தில் கட்டுண்டு விடக் கூடாது; அக உணர்வாம் உள்நோக்கு, உலகக் கட்டுகளினின்றும் விலகி, தெய்வ நெறியில் ஈடுபட் டிருக்கவேண்டும் என்று உணர்த்தினார் பெருமான் நானக், இந்த ஒப்புமைக் கருத்தை, மெய்யுணர்வு பற்றிக் கூறும் பல தமிழ் நூல்களில் காணலாம். இன்றைய போராட்ட உலகத்தில் குருநானக்கின் படிப்பினைகள் மிகவும் இன்றியமையாதவை அல்லவா? போராட்டம் நீங்குமா? நீங்கவேண்டுமே!