பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மக்கள்குழு ஒப்பந்தம் இந்த விலங்கு வாழ்க்கையிலே யாருக்கு யார் தகப்பன் என்று முறை கண்டுபிடிக்க முடியுமா? குழந்தையை அக்கறையாக வளர்ப்பவர் யார்? ஆனால் இப்படியே விட்டுவிடவில்லை. நாள் ஆக ஆகச் சிலர் இதில் கருத்தைச் செலுத்தினர்; ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தனர்; முறையாகப் பெண் கேட்டனர்; பெண் கொடுத் தனர். ஒழுங்கான குடித்தனம் நடத்தி வந்தனர். அதனால் இன்னானும் இன்னாளும் கணவன் மனைவி என்ற முறை ஏற்பட்டது. இன்னார் பிள்ளை இன்னார் என்று அறிய முடிந்தது. பிள்ளையை வளர்க்கும் அக்கறை பெற்றோருக்கு உண்டாயிற்று; பிள்ளைக்குக் கல்வி வேண்டுமே! ஆசிரியரைத் தேடினர்; அவரிடம் ஒப்படைத் தனர்; அவர் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டார். ஐயையோ! இங்கே இன்னொரு முக்கியமான சேதியை மறந்து விட்டோமே! அதையும் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். அது என்ன? மேலே பல நல்ல காரியங்கள் சொன்னோம். அவை க்ளை மனிதன் செய்தான். எப்படி செய்தான்? எந்தக் கால முதல் செய்தான்? செய்யும்படி யார் தூண்டினார் கள்? செய்வதற்கு என்ன வசதியிருந்தது? இந்த கேள்வி களுக்குப் பதில் தேவை. இது மிகவும் இன்றியமையாதது. இங்கேதான் பெரிய இரகசியம் புதைந்து கிடக்கிறது. அதை நாம் தோண்டி எடுக்க வேண்டும். எடுப்போம். ஆதியில் மனிதர் ஊர் ஊராகக் கூடி வாழவில்லை. காட்டுமிறாண்டிகளாகக் கண்ட இடங்களில் திரிந்து வந்தார்கள். ஒருவர்க்கு ஒருவர் ஒற்றுமை இல்லை. ஒருவரை ஒருவர் சாப்பிடப் பார்த்தனர். சொந்த நன்மையே