பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 139 என்பது உரையிலுள்ள ஒரு புகுதி. இதில் கூறப்பட்டுள்ள தலைச் சங்க-இடைச் சங்க கால நூல்களுள் ஒன்றுகூட இன்று கிடைக்கவில்லை. கட்ைச்சங்க கால நூல்களுள் முதல் எட்டு மட்டுமே கிடைத்துள்ளன: கூத்து வரி, சிற். றிசை, பேரிசை ஆகிய நான்கும் கிடைக்கவில்லை. - உரையில் உள்ள "இத்தொடக்கத்தன என்னும் பகுதி கருதத்தக்கது. இத்தொடக்கத்தன என்றால், இவை முதலாய பல நூல்கள் என்று பொருளாம். இப் பல நூல் களும்கிடைக்கவில்லை. ஒரு சிலவற்றின் பெயர்களாவது தெரிய வந்திருப்பது பெரும் பேறே. - முதற்சங்க நூல்களாகிய (எத்துணையோ) பரிபாடலும் முது நாரையும் முதுகுருகும், இடைச்சங்க நூல்களாகிய கலியும் குருகும் வியாழமாலை அகவலும், கடைச்சங்க நூல்களாகிய நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் கூத்தும் வரியும் சிற்றிசையும் பேரிசையும்-ஆகிய நூல்கள் தமிழ் இசை நூல்களாம். இவற்றுள், கடைச்சங்க நூல்க ளாகிய நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல் ஆகிய இரண்டைத் தவிர வேறு நூலொன்றும் கிடைத்திலது. எழுபது பரிபாடல் நூலுள்ளும் இருபத்திரண்டு பரிபாடல் களே கிடைத்துள்ளன. மேலே, சில நூல்களை இசை, நூல்கள் என்று கூறியிருப்பதற்குரிய சான்று விளக்கம் வருமாறு: 1. எத்துணையோ பரிபாடல்: தலைச்சங்க நூல்களுள் முதலாவதாகக் கூறப்புட் டுள்ளது எத்துணையோ பரிபாடல்’ என்பது. இப்பெயரைக் கொண்டு, பல பரிபாடல்கள் தொகுக்கப்பட்ட ஒரு தொகை நூல் முன்பிருந்தமை பெறப்படும். தொல்காப்பியர் பொருள் அதிகாரம்.அகத்திணையியலில் தலியே பரிபாட்டு