பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் | 4 | வழங்கப்படுதல் போல, பரிபாடல் என்னும் ஒருவகைப் பாடல்களால் தொகுக்கப்பட்ட நூல், 'பெரும் என்னும் ஒருவிதச் சிறப்பு அடைமொழியும் சேர்த்துப் பெரும் பரிபாடல் என்னும் பெயரால் சுட்டப்படலாயிற்று. கலிப் பா வகையால் ஆன நூலும் இவ்வாறே கலி - கலித் தொகை என வழங்கப் பெறுகிறது. 2. முதுநாரை, 3. முதுகுருகு : பரிபாடலுக்கு அடுத்தன 'முதுநாரை', 'முதுகுருகு' என்னும் நூல்களாகும். நாரையும் குருகும் கொக்கு இனத்தைச் சேர்ந்தன. உயரமாயிருப்பவரை நெட்டைக் கொக்கு’ என்று வேடிக்கையாகக் கூறுவது உலகியல். இதுபோல, நீளமான பாடல்களின் தொகுப்பாக இந்நூல்கள் இருந்திருக்கலாம்; அதனால் இப்பெயர் பெற் றிருக்கலாம். நாரை, குருகு ஆகிய பறவைகளைப் பற்றிய நூல்களாகவோ - அவற்றை விளித்துக் கூறும் நூல்களாகவோ இவை இருந்திருக்கலாம் எனக் கூறுதல் சிறப்புடைத்தன்று: அகநானூற்றுப்பாடல்களின் முற்பகுதி, அமைப்பினால் களிற்றியானை நிரை’ எனப் பெயர் பெற்றாற்போல, நூற்பாடல்களின் அளவு -அமைப்பைக் கொண்டே இப்பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பதே ஏற்புடைத்து. இவையிரண்டும் இசை நூல்கள். சான்று. வருமாறு:- . - சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் தமது உரைப்பாயிரத்தில், - இனி இசைத் தமிழ் நூலாகியபெருநாரை பெருங் குருகும் பிறவும்........ ... முதலாவுள்ள தொன்னூல்கள் இறந்தன” - - 6Ꭲ6öᎢ ஒரு செய்தி தெரிவித்துள்ளார். பெருநாரை பெங்குருகு என இரண்டு இசைத் தமிழ் நூல்கள் இருந்ததாக