பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 145 'அஃதன் றென்ப வெண்பா யாப்பே' (78) “துள்ளல் ஓசை கலியென மொழிப” (79) 'தூங்கல் ஒசை வஞ்சி யாகும்” (80) இந்நூற்பாக்களின் பொருள் முறையே வருமாறு: 1 ஆசிரியப் பாவிற்கு அகவல் ஓசை உரியது (அகவல் என்பது அகவிக் கூவி அழைக்கும் எடுப்பான ஓசை) 2 அகவல் ஒசையில்லாதது. (அகவாத நடுத்தர ஓசை உடையது) வெண்பாவாகும். 3 துள்ளல் ஓசை கலிப்பாவிற்கு உரியது. 4 தூங்கல் ஒசை வஞ்சிப் பாவிற்கு உரியது. இவற்றுள் அகவல் என்பதை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம. உரையாசிரியர்களுள், பேராசிரியர், "அகவிக் கூறுதலான் அகவல் எனக் கூறப்பட்டது' என்றும், நச்சினார்க்கினியர் 'அகவிக் கூறலின் அகவலாயிற்று” என்றும் விளக்கம் தந்துள்ளனர். மற்றும் பிங்கல நிகண்டில், ‘அகவல் என்பதும் அழைத்த லாகும்.” (238) 'அகவலும் எடுத்தல் ஒசைப் பெயரே' (351) எனக் கூறப்பட்டிருப்பதும் இங்கே கருதத்தக்கது. ஈண்டு இவ்வளவு கூறியதன் காரணம், அகவல் என்பது இசை சார்ந்தது என அறிவிக்கும் நோக்கமே. அகவிப் பாடும் ஆண் மகன் ‘அகவலன்' என்று அழைக்கப்பட்டான். இதனைப் பதிற்றுப் பத்தில் உள்ள, கண்டி நுண்கோல் கொண்டு களம் வாழ்த்தும் அகவலன் பெறுக மாவே' என்னும் பாடல் (43) பகுதியால் அறியலாம். அடுத்து அகவிப் பாடும் பெண்டிர் ‘அகவல் மகளிர் என அழைக் கப்பட்டனர். இத்னைக் குறுந்தொகையில் உள்ள,