பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழுஒப்பந்தம் I47 ஆருந்தை யென இவை ............... குறிஞ்சி யாழ்த்திற மாகக் கூறுவர் ” (21) என்னும் நூற்பாவால் அறியலாம். மற்றும் ஒரு சான்று வருமாறு : "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்' எனச் சுந்தரரால் பாராட்டப் பெற்றவரும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் யாழ் வல்லுநரை உடன் வைத்துக் கொண்டு பாடிவந்தவருமாகிய திருஞான சம்பந்தர், தம் தேவாரப் பதிகங்களுள் இருபத்தைந்து பதிகங்களை வியாழக் குறிஞ்சி என்னும் பண் அமைத்துப் பாடியுள்ளார். இதனாலும், வியாழம் என்பது குறிஞ்சிப் பண் வகையைச் சார்ந்தது என்பது புலனாகும். மேலும், இடைச்சங்கக் காலந்தொட்டு கி.பி. ஏழாம் நூற்றாண்டின ராகிய சம்பந்தர் காலம் வரையும் அதற்குப் பின்னரும் 'வியாழம் என்னும் பண் பெற்றிருந்த செல்வாக்கு விளங்கும். எனவே, வியாழ மாலை அகவல் என்னும் நூல், குறிஞ்சி யாழ் கொண்டு இசைக்கும் குறிஞ்சிப் பண் அமைந்த அகவல் பாடல்களின் தொகுப்பு என்பது புலனாகும். இதற்கு மேலும் அரண் செய்யும் வகையில் சிலப்பதிகாரத்தில் தக்கதோர் அகச்சான்று உள்ளது. வடநாடு சென்று வெற்றி வாகை சூடி மீண்ட சேரன் செங்குட்டுவன், அகவல் பாடும் அகவல் மகளிரைக் கொண்டு, மறவர்கட்கு இசை விருந்து அளித்தானாம். இதனைச் சிலப்பதிகாரம்-நடுகற் காதையில் உள்ள, “வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழிஇ அந்தீங் குறிஞ்சி அகவல் மகளிரின் மைந்தர்க்கு ஓங்கிய வருவிருந்து அயர்ந்து’ (25-36)