பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 13. பெரிதாய்த் தெரிந்தது. பிறரைப் பற்றிக் கவலையே கிடையாது. இப்படி இருந்து வந்தார்கள். இப்போதும் ஒரு சிலர் இப்படி இருக்கிறார்கள் அல்லவா? இதனால் வலியவன் மெலியவனை வாட்டி வதைத் தான். மெலியவன் பொருளை வலியவன் பறித்துக் கொண் டான். சிறிய மீனைப் பெரிய மீன் விழுங்கி விடுகிறது அல்லவா? இது அப்போதே சிலருக்குப் பிடிக்கவில்லை. பெரிய மனம் படைத்த பெரிய மனிதர் அப்போதும் இருந்திருப் பார் அல்லவா? பெரிய மனிதர்கள் ஒன்றுகூடினார்கள்; ஒரு வட்டாரத் தில் இருந்த மனிதரை எல்லாம் ஒன்று சேர்த்தார்கள்; ஒற்றுமையாக ஒர் இடத்தில் வாழவைத்தார்கள்; அந்த இடத்துக்கு ஒரு பேர் வைத்தார்கள். அது ஒர் ஊர் ஆயிற்று. - ஊர்மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவனை ஏற்படுத் தினர்; அவனுக்குத் துணையாக இன்னும் சிலரை அமர்த் தினார்கள். உள்ளுரில் யாராவது கலகம் செய்தாலும் சரிவெளியூரார் யாராவது கலகம் செய்தாலும் சரி-அவர்களை அடக்கத் தலைவன் ஒரு படை அமைத்தான். இது மட்டுமா? இன்னும் எவ்வளவோ செய்தான்! - . . ஊரில் குற்றம் செய்பவரைக் கண்காணிக்கக் காவலரை (போலீசுகாரரை) நியமித் தான். குற்றவாளிகளைத் தண்டிக்க நீதிபதி ஏற்பட்டார். படிப்புச் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்; நோய் போக்க மருத்துவர்; இப்படி பல வசதிகள் ஏற்பட்டன. கூடி வாழாமல் மனிதர் தனித் தனியாய் வசித்தால் இந்த நன்மைகள் கிடைக்குமா? ஒற்றுமையின் பயன் இப்போது தெரிகிறதே!