பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மக்கள்குழு ஒப்பந்தம் என்னும் பகுதி தெரிவிக்கிறது. ஈண்டு, குறிஞ்சி, கவர்ச்சி யானது - தித்திப்பானது என்னும் பொருளில் அந்தீங் குறிஞ்சி என்று சிறப்பிக்கப்பட்டிருப்பதும், அடுத்து அகவல் என்பதோடு தொடர்புறுத்தப் பட்டிருப்பதும் நுணுகி நோக்கி மகிழ்தற்குரியது. எனவே, வியாழ மாலை அகவல் என்னும் நூல் ஒரு தமிழிசை நூல் என்பது உறுதி. 7. நூற்றைம்பது கலி, 8. எழுபது பரிபாடல்: கடைச்சங்க நூல்களாகிய எட்டுத் தொகை நூல்களுள், நூற்றைம்பது கலி என்னும் கலித்தொகையும் எழுபது பரிபாடல் என்னும் பரிபாடலும் இசைத் தமிழ் நூல்களாம். முதற் சங்க நூலாகிய (எத்துணையோ) பரிபாடல் நூலும், இடைச்சங்க நூலாகிய கலி என்னும் நூலும், இசைத் தமிழ் நூல்கள் என்பது முன்னர் நிறுவப் பட்டுள்ளது. எனவே, கடைச் சங்கத்தைச் சேர்ந்த இவ்விரு நூல்களுங் கூட இசைத் தமிழ் நூல்களே என்பது பெறப்படும். பரிபாடல் நூலிலுள்ன ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், இசையும் இசை அமைத்தவர் பெயரும் கூறப்பட்டிருப்பது ஈண்டு மீண்டும் நினைவுகூரத் தக்கது. 9. கூத்து. 10. வரி: 11. சிற்றிசை: 12. பேரிசை கடைச்சங்க நூல்களாக இறுதியில் கூறப்பட்டுள்ளவை கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என்பனவாகும். வரி என்பது இசைப்பாட்டு; எனவே, இந்நூல் இசை நூலாகும். கூத்து என்பதில் வரிக் கூத்து என்பதும் உண்டு. வரிக் கூத்து என்றால், இசை நாடகம் என்பதாகும். எனவே, இங்கே கூறப்பட்டுள்ள கூத்து என்பது இசை நாடக நூலாக இருக்கலாம். இறுதியாக உள்ள சிற்றிசை, பேரிசை என்னும் நூல்கள், தம் பெயராலேயே தாம் இசை நூல்கள்