பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 149 என்பதை அறிவிக்கின்றன. இவை அழிந்தனவா அழிக்கப் பட்டனவா என்பது தெரியவில்லை. இனி, இறையனார் அகப்பொருள் உரையில் குறிப் பிடப்படாத - சங்க காலத்தை ஒட்டிய இசைநூல்கள் சிலவற்றைக் காண்போம்: 13. இசை துணுக்கம்: 14. இந்திர காளியம்: சிகண்டி முனிவர் இயற்றிய இசை நுணுக்கம் என்னும் நூல் ஓர் இசை நூல் என்று விதந்து கூற வேண்டியதில்லை. முன்னர்க் கூறப்பட்டுள்ள தமிழ் இசை நூல்கள் எல்லாம், பண்ணமைந்த பாடல் நூல்களாகும். இசை நுணுக்கம் என்பதோ, இசை யிலக்கணம் கூறும் நூல் என்பது பெயராலேயே தெரிகிறது. கிடைக்காத இவ்விசை யிலக் கண நூலில், இசையின் நுட்பக் கூறுகள் கூறப்பட்டிருக்க வேண்டும். யாமளேந்திரர் இயற்றிய இந்திர காளியம் என்பதும், இசை நூல் என்று கருதப்படுகின்றது. மேற் கூறப்பட்டுள்ள இரண்டு நூல்களைப் பற்றிய குறிப்பு, சிலப்பதிகார உரைப் பாயிரத்தால் அறியப்படுகின்றது. இவ்வாறு இன்னும் பல நூல்கள் இருந்து அழிந்து போயிருக்கலாம். "இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங் குருகும் ... ... ... முதலாக உள்ள தொன்னூல்கள் இறந்தன” எனச் சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் கூறியிருப்பது ஈண்டு மீண்டும் நினைவுகூரத்தக்கது. 15. பஞ்சமரபு: அறிவனார் இயற்றிய பஞ்சமரபு என்னும் இசை நாடக நூலும் சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்நூல் கிடைக்கப் பெற்று வெளியிடப்