பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 151 இந்த உரைப் பகுதியின் வாயிலாக, சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் பதினாறுபடலம்' என்னும் இசைத் தமிழ் நூலினை அறிமுகம் செய்துள்ளார். அவர் காலத்துக் கிடைத்திருந்த இந்நூல் இப்போது இல்லை. மற்றும், சிலம்புகானல் வரி-தொடக்கப் பகுதியிலுள்ள பண்ணல், பரிவட் டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்னும் எண்வகை இசை ஆய்வு களை விளக்கப் போந்த அரும்பதவுரையாசிரியர். இவற்றை விளக்கும் பதினாறு படலம் என்னும் நூலிலுள்ள எட்டு இசையிலக்கண நூற்பாக்களைத் தந்துள்ளார். இசைத்தமிழ் இலக்கணத்தை இவ்வளவு விளக்கமாகச் சொல்லும் பதினாறு படலம் நமக்குக் கிடைக்காமற் போனது தீப்பேறே. . 7. சிலப்பதிகாரம் : கடைச்சங்க காலத்தை ஒட்டிய நூல்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரம், இயல்-இசை-கூத்து என்னும் முப்பகுதி களும் அடங்கிய முத்தமிழ்க் காப்பியம் என்று புகலப் பெறுகிறது. இந்நூலில் இசையிலக்கணம், இசைக் கருவி யிலக்கணம் முதலிய இசை தொடர்பான செய்திகள் பல விவரிக்கப்பட்டுள்ளன. மற்றும், இந்நூலிலுள்ள, கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை முதலிய பகுதிகள் இசைப் பாட்டுகள் உடையனவாகும். இன்னும் வளர்த்துவது ஏன்? தமிழ் இசையில் சிலப்பதிகா ரத்துக்கும் பங்கு உண்டு. 18. பரத சேனாபதீயம் : 19. மதிவாணர் நாடகத் தமிழ் நூல் : ஆதிவாயிலார் இயற்றிய பரதசேனாபதியம்’ என்னும் நூலும் பாண்டியன் மதிவாணனார் இயற்றிய மதிவாணர்