பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 மக்கள்குழு ஒப்பந்தம் நாடகத் தமிழ்' என்னும் நூலும் இப்போது கிடைக்காத தொன்னூல்களாம். நாடகத் தமிழ் நூல்களாகிய இவற்றி லும், சிலப்பதிகாரம் போலவே, இசை பற்றிய கூறுகள் நிரம்ப உண்டு. இசையின்றிக் கூத்து ஏது? இவ்விரு நூல் களும் சிலம்பு-உரைப்பாயிரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 20. பன்னூல்கள்: பரதம், முறுவல், சயந்தம், செயிற்றியம் முதலான நூற் பெயர்கள் தெரிய வருகின்றன. இவற்றைச் சேர்ந்த சில நூற்பாக்கள் (சூத்திரங்கள்) மட்டும் கிடைத்துள்ளன; நூல்கள் முழுமையாகக் கிடைத்தில. தொல்காப்பியம்: 'கல்யாண சந்தடியில் தாலி கட்ட மறந்தாற்போல்’ பல நூல்களைப் பற்றிப் பேசும் ஆரவாரத்தில் தொல் காப்பியத்தை மறப்பதற்கில்லை. இதுகாறும் முழுமையாகக் கிடைத்திருக்கும் தமிழ் நூல்களுள் தொல்காப்பியமே முந்தியது. இற்றைக்கு இரண் டாயிரத்தைந் நூறு அல்லது மூவாயிரம் ஆண்டுக்கு முற் பட்டதாகத் தொல்காப்பியம் கருதப்படுகிறது. இந்நூலின் செய்யுளியல் என்னும் பகுதியில் இசைப்பாட்டு இலக்கணம் இயம்பப்பட்டுள்ளது. ஆசிரியப் பாவுக்கு அகவலோசையும் வெண்பாவுக்கு அகவாத செப்பல் ஒசையும், கலிப்பாவுக்குத் துள்ளல் ஓசையும், வஞ்சிப் பாவிற்குத் தூங்கல் ஒசையும் உரியன எனக் கூறப்பட்டிருப்பது கருதத்தக்கது. ஒசைக்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாட்டு என்பதே பாடப்படுவதுதானே! பாடுவது என்றால் இசையுடன் பாடு வதேயன்றோ? எனவே, இசையிலக்கணம் கூறியுள்ள தொல் காப்பியமும் ஒரு வகையில் இசை நூலாகும்; இவ்விலக்