பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 153 கணப்படி இயற்றப் பெற்ற நால் வகைப் பா-பாவினப் பாடல் நூல்களும் இசைத்தமிழ் நூல்களேயாம். தொல்காப்பியத்துக்கு முன்பே பல இசை நூல்கள் இருந்தன என்பதைத் தொல்காப்பியர் செய்யுளியலில் பின் வருமாறு கூறியிருப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்: "நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே' "அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே” (10) என்னும் இரு நூற்பாக்களிலும் இசை” என்னும் சொல் இடம் பெற்றிருப்பது கருதத் தக்கது. மற்றும், “வரைவின்று என்ப வாய்மொழிப் புலவர்” (74) “யாப்பென மொழிப யாப்பறி புலவர்” (77) 'நூல்நவில் புலவர் துவன்றறைந் தனரே” (153) 'ஒத்தென மொழிப உயர்மொழிப் புலவர்’ (168) எனக் கூறியிருப்பதனாலும், பல இடங்களில், என்ப, மொழிப, என்மனார் புலவர் என்று கூறியிருப்பதனாலும், தொல்காப்பியருக்கு முன்பே பலர் இசைப் பாடல் நூல் களும் இசையிலக்கண நூல்களும் இயற்றியிருந்தமை புலனாகும். இலக்கியம் இருந்தாலேயே அதையொட்டி இலக்கணம் தோன்றும். எனவே, தொல்காப்பியம் என்னும் இலக்கணம் இருப்பதைக் கொண்டு இலக்கியங்கள் இருந்தன என உணர வேண்டும், செய்யுளியல் உரையில் பல்வேறிடங் களில் பேராசிரியர் கூறியுள்ள பின்வரும் தொடர்கள் எண்ணத்தக்கன :