பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் i55 எனவே, தமிழ் இசையின் தொன்மைக்குத் தனியான ஆராய்ச்சி வேண்டுவதில்லை. இந்தத் தொன்மைச் சிறப்பு, தமிழ் மொழிக்கு இருப்பதல்லாமல், உலகில் உள்ள எல்லர் மொழிகட்கும் உண்டு. தமிழில் இசை இல்லை என்று குறை கூறும் குறைமதி யோர்க்காக வேண்டுமென்றால், தமிழ் இசையை ஒழித்துமறைத்துப் பிற இசைகளைப்புகுத்தி நிலைநாட்ட முயலும் கொலைகாரர்க்காக வேண்டுமென்றால், தமிழ் இசையின் தொன்மைப் பெருமையை எடுத்து இசைக்கலாம். இந்தச் சூழ்நிலையில் வேண்டுமென்றால் இஃது இன்றியமையாத தாகும். தமிழ் இசை வாழ்க! கருத்து வழங்கிய கருவூலங்கள்: தொல்காப்பியம் தொல்-பேராசிரியர் உரை தொல்-நச்சினார்க்கினியர் உரை இறையனார் அகப்பொருள் உரை கல்வி உளவியல் நூல் பரிபாடல் அகநானுாறு திருக்குறள் சீவகசிந்தாமணி புறப்பொருள் வெண்பாமாலை செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயர் வீட்டு ஒலைச் சுவடி திவாகர நிகண்டு பிங்கல நிகண்டு சுந்தரர் தேவாரம் சம்பந்தர் தேவாரம் சிலப்பதிகாரம் சிலம்பு-உரைப்பாயிரம் சிலம்பு-அரும்பத உரை சிலம்பு-அடியார்க்கு நல்லார் உரை இன்ன பிற