பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 மக்கள்குழு ஒப்பந்தம் இந்த விதமாக ஊர்த் தலைவன் ஊரை ஆண்டு வந்தான். அவனை அரசன் என்று மக்கள் அழைத்தனர். அரசரைப் பற்றி நாம் எவ்வளவோ கத்ைகள் கேட்டிருக் கிறோம் அல்லவா? இப்படி பெரிய மனிதர் முயற்சியால் அரசன் தோன்றி னான். அரசனால் அரசாங்கம் ஏற்பட்டது. அதன்மூலம் பல வசதிகள் கிடைத்தன. இந்தக் காலம் முதலே மனிதர் பல நல்ல காரியங்கள் செய்ய முடிந்தது. இந்த விதமாக உலகத்தில் பல அரசர்கள் தோன்றினார் கள். பல அரசாங்கங்கள் தோன்றின. ஒவ்வொரு அரச ருடைய நிலமும் ஒவ்வொரு நாடு என்று சொல்லப்பட்டது. தேசம் என்று சொல்லுவதும் உண்டு. ஒவ்வொரு நாட்டு அரசரும் மக்களும் ஒற்றுமையாய் வாழ்ந்தனர். தங்கள் தங்கள் நாட்டின்மேல் அளவு கடந்த பற்று கொண்டார்கள். இது யாருக்கும் இயற்கைதானே! இன்னொன்றும் மனிதருக்கு இயற்கைதான். அதுதான் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொள்வது. அப்பாடா! உலகத்தில் அரசரோடு அரசர்கள் எத்தனையோ சண்டைகள் போட்டார்கள். எத்தனையோ உயிர்கள் மாண்டன. எவ்வளவோ ஊர்கள் அழிந்தன. எவ்வளவோ பொருள்கள் கெட்டன. உலகத்தின் தலைவர்கள் ஒன்று கூடினார்கள். நமக்குத் தான் தெரியுமே! இப்போது முன்காலம் போல் அரசர்கள் இல்லை. மக்களே தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சட்டசபை உண்டு. இதில் உள்ள தலைவர்களும் அமைச்சர் களுமே நாட்டை ஆளுகிறார்கள் அல்லவா! இப்படியாக உள்ள பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கூடிப் பேசினார்கள். ஒரு சங்கம் ஏற்பட்டது. எங்கேயாவது சண்டை நடந்தால் இந்தச் சங்கம் கண்டிக்கும்; தடுக்கும்.