பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158. மக்கள்குழு ஒப்பந்தம் மற்ற இனத்தாரினும், நெசவு முதலியார்கள் மிகுதியா யுள்ள சிற்றுரர்களில், முருங்கை தெருவில் செழிக்கிறது. இதற்கு உரிய காரணமாவது; மற்ற இனத்தினர் வீட்டுக் குள்ளேயோ அல்லது ஊருக்கு வெளியிலேயோ வேலை செய்வது பெரும்பான்மையாகும். ஆனால், இந்த இனத் தினர் இருக்கும் தெருக்களில், காலை முதல் மாலை வரை மக்கள் புழக்கம் இருந்து கொண்டேயிருக்கும். அல்லி பிடித்தல், பாவு சுற்றுதல், பாவு தோய்தல் முதலிய நெசவு தொடர்பான வேலைகள் நாள் முழுதும் தெருவில் நடந்து கொண்டேயிருக்கும். இதனால் தெருவில் முருங்கை செழிக் கிறதோ! யான் எதையும் உறுதியாகச் சொல்லத் துணியவில்லை; இதனை ஓர் ஆய்வுக் கருத்துரையாகவே இங்கே வைத் துள்ளேன். முருங்கை பழையது எனினும், முதலியார் என்னும் அதன் பட்டப்பெயர் பலருக்குப் புது அறிமுகமே யன்றோ? (குறிப்பு:- இக்கட்டுரை சாதி அடிப்படையில் இன்றி ஆய்வு அடிப்படையில் எழுதப்பெற்றுள்ளது.)