பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 161 தன்னல மின்றித் தரைநலம் பேணல் விட்டுக் கொடுத்தல் கட்டுப் பாடு கடின உழைப்பு கலங்கா உறுதி ஐம்புல நுகர்வுக் கடிமைப் படாமல் அடக்கி யாண்டு உடல்நலம் ஆக்கல் மக்கட் பண்பு மனநலம் பேணல் ஒழுக்கம் ஒம்பல் ஒற்றுமை பெருக்கல் ஒப்புர வறிந்தே உலகோ டொட்டுதல் இனைய பண்புகள் யாவர்க்கும் இருப்பின் உலகம் உய்வ துறுதி! உய்வழி யறிந்தே உலகம் உய்கவே!” 2 காட்சி கொடுக்காத கடவுளை நோக்கி, தன்மேல் இரங்கி ஏன் காட்சி தரவில்லை என ஒர் அன்பன் தொந்து கேட்பதாக, இல்லையோ நீ என்னும் தலைப்பில் யான் நீண்டதொரு பாடல் தொகுப்பு படைத்துள்ளேன். தொகுப்பிலிருந்து ஐந்து பாடல்களை இங்கே தருகிறேன். 'இல்லையோ நீ" 'பிள்ளையிளம் பருவத்தே பெற்றோர்கள் சொன்னார்கள் கள்ளமது நீபுரியின் கண்குத்தும் சாமியென்று வெள்ளைமனப் பெற்றோரால் விளைந்ததுநின் அறிமுகமே உள்ளத்து நம்பினனே ஒருவன் நீ உண்டென்றே. வெள்ளிக் கிழமைதொறும் விரும்பி மிக என் அன்னை மெள்ளக் கொண்டுசென்றாள் மேவுமுன்றன் கோயிலுக்கு; குள்ளக் குறுங்காலால் கோடிவலம் வந்தேனே கள்ளங் கபடின்றிக் கையெடுத்துத் தொழுதேனே'