பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மக்கள்குழு ஒப்பந்தம் இறுமாப் புடனே எக்களிப் புற்றேன். பன்னாள் கழியப் பாரகந் தன்னில் என்னே மாந்தரின் இழிசெயல் கண்டேன் ஒருவரைக் கொன்றுவே றொருவர் வாழ்வது ஒருவரைப் பறித்தின் னொருவர் தின்பது போரெனும் பெயரால் பொல்லாத் தலைவர்கள் ஆயிர மாயிரம் மாந்தரை அழிப்பது அரசியல் பெயரால் அடாதன செய்வது கடவுள் பெயரால் களங்கம் புரிவது கள்ள வாணிகம் கையூட்டு கொள்ளை கொள்ளி வைத்தல் கொலைபல செய்தல் பொய்யொடு சூது புரட்டு வாதுகள் ஐயோ ஐயோ! அளவிலாக் கொடுமை! இன்ன கொடுமைகள் இழைப்பவர் மிகப்பலர் இவர்தமை அரக்கரென் றெண்ணினேன்; ஆனால் இவர்தாம் மாந்தர்போல் இருக்கக் கண்டேன். கல்வி யறிவுடன் கலையா ராய்ச்சி பல்கிய மாந்தர் குலத்தின் பண்பிதா? பறவைக் குலத்துளிப் பழிச்செயல் இல்லையே விலங்கினுள் இத்தீ வினைகள் இல்லையே எவ்வுயிர்க் குலத்திலும் இத்துணைக் கொடுமை எவ்விடந் தனிலும் இல்லை யாதலின், மன்னுயிர்க் குலங்களுள் மாந்தர் குலமே இன்னல் புரியும் இழிந்த குலமென நன்னர்த் துணிந்தேன் நானிக் குலத்தில் பிறந்த பழிக்குப் பெரிதும் நாணினேன். பின்னர் எனக்கோர் எண்ணம் பிறந்தது என்னே செய்தேன்! ஏனிந் நாணம்? ஈண்டிக் குலத்தில் யான் பிறந்ததற்கா