பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மக்கள்குழு ஒப்பந்தம் கேள்வி ஏது? தடி எடுத்தவன் தண்டல்காரன் - அவ்வளவு தான்! போலீசா? அரசாங்கமா? யார் கேட்பது? ஏன் - இப்போதும் சிலர் இப்படி இருக்கிறார்கள் அல்லவா? எனவே, இப்போது இரகசியம் புரியலாம் என்று நினைக் கிறேன். பெண்ணைப் பிறன் ஒருவனுக்குக் கொடுப்பது - பிள்ளையை ஆசிரியரிடம் ஒப்படைப்பது - தண்டிக்கும் காவலர்கள், நீதிபதிகள், அரசர்கள், அரசு அலுவலர்கள் ஏற்பட்டது - இந்த ஏற்பாட்டை எல்லாரும் ஏற்றுக்கொண் டது - புதிது புதிதாய்ப் பல பொருள்களைக் கண்டுபிடித்து ஒருவர்க்கு ஒருவர் உதவிக்கொள்வது - முதலியன எல்லாம், மக்கள் குழுவிற்குள்-(சமுதாயத்திற்குள்) ஒருமித்து ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவேயாகும். இதுதான் மக்கள்குழு (சமுதாய) ஒப்பந்தம்’ எனப்படும். இது இன்னும் பெரிய அளவில் வளர்ச்கி பெற்று, உலகில் பசி, பிணி, பகை, போர், களவு முதலிய தீமைகள் இன்றி, உலகம் நலத்தோடும், வளத்தோடும் வாழவேண்டும். அப்போதுதான், முழு சமுதாய ஒப்பந்தம் உருப் பெற்றதாகவும் வெற்றி பெற்ற தாகவும் கருதப்பெறும். - உலகில் உள்ள உயிர் இனங்களுள் மக்களும் ஓர் இனம் - மேலும் உயர் இனம். ஒர் உயிர் இனத்தின் இயல்பு அந்த உயிர் இனம் முழுமைக்கும் இருக்கக்கூடும். ஒரு பாம்பு ஒருவரைக் கடித்ததால் அவர் இறந்து விடின், அந்தப் பாம்பினம் முழுமைக்கும் நஞ்சு உண்டு என்று நம்பப்படும். ஒரு வாழைமரம் கனி தரின், அந்த இனத்து மரங்கள் அனைத்தும் கனி தரும் என்று நம்பலாம். இவ்வாறே, ஒரு மனிதன் தீமைகள் செய்யின், மற்ற மனிதர்களும் தீமை செய்யக் கூடியவர்கள் என்று ஏன் எண்ணக்கூடாது? பெரும் பாலார் செய்கிறார்களே! ஒரு சிலரே சூழ்நிலை வன்மை யால் தீமை செய்யாமல் நன்மை செய்கின்றனர். ஒருவரது