பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e ● 20 மக்கள்குழு ஒப்பந்தம் எனவேதான், ஆற்றங்கரைகளில் மக்கள் உறைவிடங் களை அமைத்துக் கொண்டனர். ஆங்கே நிலம் பெறமுடி யாதவர்கள், வேறு இடங்களில் உறைவிடம் அமைத்துக் கொண்டு அவ்வம் மண்ணில் விளைந்தனவற்றை உண்டு வாழ்ந்து வந்தனர். வேறிடத்து மக்களினும், ஆற்றங்கரை மக்களே வாழ்க்கை வசதியிலும், கல்வி-கலைத்துறையிலும், நாகரிகத்திலும் மிகச் சிறந்திருந்தனர் என்பது வரலாறு கண்ட உண்மை. ஊர்: மக்கள் வாழும் குடியிருப்புக்களை, தமிழில் ஊர், புரம், பேட்டை, பாளையம், பாக்கம், பட்டினம், பதி, நகர், சேரி, பூண்டி, அகரம், குடி, குறிச்சி, வேலி, பாடி, குப்பம், சாவடி, பட்டு, பட்டி, கோட்டம், கோட்டை, கிராமம், வலசு, மங்கலம், கோயில், பள்ளி, கரை, துறை, மலை, கானல், காடு, குளம், ஏரி, தோப்பு, நாடு, குடிசை, சத்திரம், சமுத்திரம் முதலிய பெயர்களால் நாம் அழைக் கிறோம். இதனை, -

  • பாக்கம், பட்டினம், பதி, நகர், சும்மை,

பூக்கம், சேரி, புரம், முட்டம், பூண்டி, அகரம், குடியே, குறிச்சி, கோசரம், அகலுள், நொச்சி, இருக்கை, வேலி, குப்பம், பாடி, குறும்பு, பாழி, சிறுகுடி, தண்ணடை, உறையுள், எயிலொடு, வாழ்க்கை, உட்படுத்து இருபத் தேழும் நாடில் 'ஊர்' என நவின்றி.சி னோரே' 'பட்டும், நொச்சியும், பள்ளியும் சிற்றுார்”

  • சேந்தன் திவாகரம் - இடப் பெயர்த் தொகுதி - நூற்பா : 88, 94. -