பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு. ஒப்பந்தம் 21 முதலிய திவாகர நூற்பாக்களாலும், உலக வழக்குப் பெயர் களாலும் அறியலாம். இப்பெயர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாக 'ஊர்' என்னும் பெயரே உலக வழக்கில் தலைமை தாங்குகிறது. நாம் புதியவர் ஒருவரைக் கண்டால், 'உங்கள் ஊர் எந்த ஊர்?' என்று கேட்கிறோமே தவிர, 'உங்கள் பட்டி எந்தப் பட்டி?” என்றோ, உங்கள் பாக்கம் எந்தப் பாக்கம்?” என்றோ கேட்பதில்லை. கதை சொல்பவர்கள் கூட, ஒரே ஒர் ஊரிலே’ என்று தொடங்குகிறார்களே யொழிய, ஒரே ஒரு குப்பத்தில் என்றோ, ஒரே ஒரு புரத்தில் என்றோ தொடங்குவதில்லை. ஒர் இடத்தைக் குறிப்பிடுவதானா லும், மன்னார்குடி என்னும் ஊரிலே’ என்று குறிப்பிடு கிறார்களேயன்றி, மன்னார்குடி என்னும் சேரியிலே' என்றோ, மன்னார்குடி என்னும் பாளையத்திலே என்றோ குறிப்பிடுவதில்லை. எனவே, 'ஊர்' என்னும் பெயர், மக்கள் குடியிருப்புக்களின் பொதுப் பெயர் என்பது புலனாகும். முற்கூறிய திவாகர நூற்பாவிலும், “பாக்கம், பட்டினம்......இருபத் தேழும் நாடில் 'ஊர்' என நவின்றி.சி னோரே' என, பாக்கம். பட்டினம் முதலிய இருபத்தேழும் 'ஊர்' என்னும் பொதுப் பெயராலேயே சுட்டப்பட்டுள்ளமை காண்க. இவ்வாறு, முல்லை நிலத்துக் குடியிருப்பாகிய பாடி, குறிஞ்சி நிலக் குடியிருப்பாகிய குறிச்சி, நெய்தல் நிலக் குடியிருப்பாகிய பட்டினம் முதலிய எல்லா - நிலத்துக் குடியிருப்புக்களையும் குறிக்கப் பயன்படும் ஊர் என்னும் இப் பொதுப் பெயர், பண்டைக் காலத்தில், ஆற்றங் கரையை அடுத்த - நன்செய் வயல்கள் நிறைந்த மருத