பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மக்கள்குழு ஒப்பந்தம் நிலத்துக் குடியிருப்புக்களைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகட்குமுன், 'ஊர்' என்றால் ஆற்றங்கரை வயல் வளம்மிக்க மருதநிலக் குடியிருப்பு என்றுதான் பொருள். ஆற்றுக்கும் ஊருக்கும் உள்ள தொடர்பினை, தொல்காப்பிய - பொருளதிகார . அகத் திணை யியலிலுள்ள,

  • " தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப” என்னும் நூற்பாவின் உரை விளக்கத்தில், உரையாசிரியர் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள, 'முல்லைக்கு நீர் : கான்யாறு (காட்டாறு); ஊர்: பாடியும் சேரியும் பள்ளியும். குறிஞ்சிக்கு நீர் அருவியும் சுனையும்; ஊர் : சிறுகுடியும் குறிச்சியும். மருதத்திற்கு நீர் : யாற்று நீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர்: ஊர்கள் என்பனவேயாம். நெய்தற்கு நீர் : மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர் : பட்டினமும் பாக்கமும். பாலைக்கு நீர் : அறுநீர்க் கூவலும் சுனையும்; ஊர் : பறந்தலை.” என்னும் உரைப்பகுதி நன்கு வலியுறுத்தும். மற்ற நிலத்துக் குடியிருப்புகளுக்கெல்லாம் தனித்தனிப் பெயர்கள் குறித்துள்ள ஆசிரியர், மருதநிலத்துக் குடியிருப்புக்கு மட்டும் ஊர்கள் என்பனவேயாம்' என 'ஊர்' என்னும் பெயரையே குறிப்பிட்டுள்ளமை காண்க. மற்றும், ஊரைக் கொண்டுள்ள மருதநிலத்திற்கே ஆற்றுநீர் உரியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் ஈண்டு இணைத்து நோக்கற் பாலது. இதனை, நாற்கவிராசநம்பி இயற்றிய 'அகப் பொருள் விளக்கம்' என்னும் நூலில் உள்ள,

  • தொல் - பொருள் - அகம் நூற்பா : 18