பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்த்ம் 29 கோயிலும் உள்ளன. புகைவண்டியில் வ ரு ப வர் க ள், விழுப்புரம்-திருச்சி குறுக்குப் பாதையில் (Chord line) உள்ள ‘பரிக்கல்’ என்னும் நிலையத்தில் இறங்கித் தென்கிழக்காக 3 கி.மீ. சென்றால் நாவலூரைக் கண்டு களிக்கலாம். பெயர்கள்: பண்டு நாவல்மரம் நிறைந்திருந்ததால் நாவலூர்' என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நாம் வாழும் இந்தியத் துணைக்கண்டத்திற்கு நாவலந் தீவு' என்னும் பெயருண்மை ஈண்டு ஒப்புநோக்கற் பாலது. (சுமார்) 2,500 மக்கள்தொகை கொண்ட இவ்வூர், மக்களின் பேச்சு வழக்கில் திரு நாம நல்லுார்’ என்றே பெருவாரி யாகக் குறிக்கப்படுகிறது. இராசாதித்தபுரம் என்னும் பெயரும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. நாவலூரார் நால்வர்: சைவ உலகில் திருநாவலுார் மிகமிக இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் நால்வர் பிறந்து வாழ்ந்த ஊர் நாவலுார். இத்த கைய சிறப்பு வேறு எந்தப் பதிக்கும் இல்லையன்றோ? எந்த நாயன்மார் நால்வராவார்: சுந்தரமூர்த்தி நாயனார், அவருடைய தந்தை சடைய நாயனார், தாய் இசைஞானி யார், சுந்தரரை எடுத்து வளர்த்தவரும் நாலலுார்ப் பகு தி ைய ஆண்டவருமாகிய நரசிங்க முனையரைய நாயனார் - என்பவராவர். இந்த நாவலூரில் பிறந்ததால் சுந்தரர்க்கு நாவலுாரர்' என்ற பெயரும் உண்டு. சைவ உலகிற்கு நாயன்மார் அறுபத்துமூவரையும் உருவாக்கியளித்தவர் சுந்தரர் என்று சொன்னால் மிகை யாகாது. திருத்தொண்டத்தொகை என்னும் பதிகத்தில், நாயன்ம்ார் அறுபத்து மூவரையும் தொகுத்துப் பாடியதன்