பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 33 திருக்கக்கூடும் என நுனித்துணரலாம். இதற்குத் தக்க சான்று வேறு ஒன்றும் கூறமுடியும். திருநாவலுாரில் சிவன் கோயிலுக்கு எதிரேயுள்ள சிறிது மேடான நிலப்பகுதியை அவ்வூர் மக்கள் கச்சேரிமேடு' என அழைக்கின்றனர். கச்சேரி” என்பது அரசனது திருவோலக்க அவையைக் குறிப்பதாகும். அவ்விடத்தில் அரசவை கூடி அரசவினைகள் ஆராயப்பட்டதாகச் சொல் லப்படுகிறது. அங்கே அரசவை கூடிற்றென்றால் அப்பகுதி தானே அரசனது தலைநகராய் இருந்திருக்கக் கூடும்? எனவே, நரசிங்கமுனையரையர் சுந்தரரை மகன்மை (சுவீகாரம்) கொண்ட செய்தியைக்கொண்டும், கச்சேரி மேடு என்னும் பழைய வழக்காற்றுப் பெயரைக் கொண் டும், திருநாவலுார் நரசிங்கமுனையரையரின் தலைநகரா யிருந்திருக்க வேண்டும் என உய்த்துணரலாம். நரசிங்கமுனையரையர் நலமும் வளமும் பெருக நாடாண்ட மாண்புடன், கனிந்த இறையன்பு மிக்கவராயும் திகழ்ந்தார். சிவன்பால் இவருக்கு இருந்த ஈடுபாடு வியத்தற் பாலது. இவர் திங்கள்தோறும் திருவாதிரை நாளில் சிவ னுக்குச் சிறப்பு விழா நடத்தினார். அந்நாளில் வரும் சிவ னடியார் அனைவர்க்கும் பொற்காசு பரிசளிப்பது இவர் வழக்கமாம். இத்தகு சிவத்தொண்டால் இவர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராக வைத்து வழிபடப் பட்டு வருகிறார். திருநாவலுார்க் கோயிலில் நரசிங்க முனையரையர்க்கு உருவச்சிலை உள்ளது. உலோகத்தா லான இந்தச் சிலை காண்பதற்கு மிகவும் கவர்ச்சியாயிருக் கிறது. சிவன்கோயில் : பாடல்பெற்ற திருநாவலுார்ச் சிவன் கோயிலின் பெயர் கள்: பக்தசனேசுவரர் கோயில், திருத்தொண்டிச்சுரம்,