பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மக்கள்குழு ஒப்பந்தம் இராசாதித்தேசுரம் என்பனவாம்; இறைவன் பெயர்கள்; நாவலேசுரர், பக்த சனேசுவரர் என்பன; அம்மன் பெயர் கள்: சுந்தரவல்லி, சுந்தரநாயகி, மனோன்மணி என்பன; கோயில் மரம் அதாவது தலவிருட்சம் நாவல் மரமாகும். இக்கோயில் சுந்தரரின் தேவாரப் பதிகம் பெற்றது; அதில் பதினொரு பாடல்கள் உள்ளன. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் மேல் அருணகிரி நாதர் திருப்புகழ் ஒன்று பாடியுள்ளார். எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டளவில் சுந்தரரின் தேவாரப் பாடல் பெற்ற இப்பதி, ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே திருநாவுக்கரசின். தேவாரப் பாடலிலும் வைப்புப் பதியாக இடம் பெற்றுள்ளது. நாவுக்கரசர் தமது தேவாரத்தில் - பூவனூர்த் திருக்குறுந்தொகை எட்டாம் பாடலில், “ பூவ னுர்தண் புறம்பயம் பூம்பொழில் நாவ லூர்நள் ளாறொடு நன்னிலம் கோவ லூர்குட வாயில் கொடுமுடி , மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே'. என நாவலுாரைக் குறிப்பிட்டுள்ளார். நாவுக்கரசர் நாவலுாரின்மேல் தனிப்பதிகமும் பாடியேயிருப்பார். அது கிடைக்கவில்லை. அவர் பதிகங்கள் பல கிடைக்கவில்லை என்பது வரலாறு கண்ட உ ண் ைம. பிற்காலத்தில் திருவெண்ணெய்நல்லூர் இராசப்பநாவலர் என்னும் புலவர் இவ்வூர்மேல் புராணம் ஒன்று பாடியுள்ளார். இந்தத் திருநாவலூர்ப் புராணத்தில் ஒன்பது பாகங்கள் உள்ளன. மொத்தச் செய்யுட்கள்: 514. இவ்வாறு பல்வேறு பாடல்களைப் பெற்றுள்ள திருநாவலுார்ச் சிவன்கோயில் பார்த்து மகிழத்தக்கது. கிழக்கு நோக்கியுள்ள இக்கோயிலின் முதற் பெருவாயிலின்