பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 35 மேல் பெரிய கோபுரம் எடுப்பாக நிற்கிறது. கோபுரத்திற்கு எதிரேயுள்ள மேட்டுப்பகுதி கச்சேரிமேடு எனப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பே இக்கோயில் பல்லவ மன்னர்களின் பணிகளைப் பெற்றிருந்தது. பத்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் - அதாவது கி.பி. 935-ஆம் ஆண்டளவில், சோழப் பெருவேந்தன் முதல் பராந்தக சோழன் ஆண்டுகொண்டிருந்தபோதே, அவன் மூத்த மகன் இராசாதித்த சோழன் திருநாவலுார்க் கோயிலின் உட் பகுதியைக் கருங்கல்லால் கட்டுவித்தான். அவனது திருப் பணியைப் பெற்றதனால் இக்கோயிலுக்கு இராசாதித்தே சுரம் என்னும் பெயரும் சூட்டப்பட்டது. அன்று திருநாவ லுார் இராசாதித்தனது மேற்பார்வையில் இருந்ததால், 'இராசாதித்தபுரம் எனவும் அழைக்கப்பட்டது. திருநாவ லுார் ஒரு காலத்தில் தலைநகர்த் தகுதி பெற்றிருந்தது என்பதற்கு இஃதும் ஒரு சான்று. தந்தை பராந்தக சோழனது மேலாட்சியின் கீழ், மகன் இராசாதித்த சோழன் திருநாவலுாரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப் பாடி நாடு என்னும் நடுநாட்டுப் பகுதியைக் கண்காணித்து வந்திருக்க வேண்டும் என இதனால் உய்த்துணரலாம். இராசாதித்த சோழன் 944-ஆம் ஆண்டில், இராட்டிர கூட மன்னன் மூன்றாம் கிருட்ணதேவனைத் தக்கோலம் என்னும் இடத்தில் பொருது முறியடித்தான். ஆனால் முறியடித்த அன்றிரவே, இராட்டிரகூட மன்னனின் மைத்துனனாகிய அங்க குலத்துப் பூதுகன் என்னும் பூதராசன் சூழ்ச்சியினால் இராசாதித்தனைக் கொன்று விட்டான். இந்தச் செய்தி பல கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. இராசாதித்தனுடன் தக்கோலம் வரை போர்புரியச் சென்ற படைமறவர்களும் தானைத்தலைவர்

  • இந்திய சாசனங்கள்: தொகுதி 5 - பக்கம் 167;

தொகுதி 6 - யக்கம் 51; தொகுதி 7 - பக்கம் 195