பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 37 இது என இன்றும் திருநாவலுாரில் ஒரு மனை சுட்டிக் காட்டப் படுகிறது. அந்த மனை கோயிலுக்கு வடபுறமாக மிக அணித்தே உள்ளது. அந்த மனையில் சுந்தரர் பெயரால் இப்போது ஒர் அழகிய நினைவு மாளிகை’ கட்டப்பட்டுள்ளது. திருநாவலுாரில் பல்வேறு மரபு மன்னர்களின் கல்வெட் டுகள் உள்ளன. ஏறக்குறைய 105 கல்வெட்டுகளுக்கு மேல் இதுவரையும் கிடைத்துள்ளன. அக்கல்வெட்டுகளால் திருநாவலுாரைப் பற்றிப் பல செய்திகள் தெரிந்துகொள் ளலாம். சுந்தரர் தமிழ்: இறுதியாக, திருநாவலுாரைப் பாடல் பெற்ற பதியாக உயர்த்திய சுந்தரரின் தேவாரப் பதிகத்திற்கு வருவோம். இப்பதிகத்திலுள்ள பதினொரு பாடல்களில் முதல் பத்தின் இறுதியிலும், 'நாவலனார்க் கிடமாவது நம்திரு நாவலுாரே'. "நாயகனார்க் கிடமாவது நம்திரு நாவலுாரே'. "நடமாடியார்க் கிடமாவது நம்திரு நாவலுாரே'. என்பதாக, இறைவனுக்கு இடமாவது திருநாவலுார் எனக் கூறி முடித்துள்ளார் சுந்தரர். ஒவ்வொரு பாடலின் இறுதி யிலும் நம் திருநாவலுார்’ எனச் சுந்தரர் திருநாவலுாரை உரிமை கொண்டாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறிய தமிழ் மரபில் வந்த பெரியார் சுந்தரராலும் ஊர்ப்பற்றை விடமுடியவில்லை போலும்! இவற்றிற்கெல்லாம் முடிமணியாகச் சுந்தரர் இறுதிப்பாடலாகிய பதினோராம் பாடலில்,