பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தே நாட்டுப் புறம்! நாடும் நகரமும்: 'தே நாட்டுப் புறம் - தே பட்டிக்காடு' என்றெல்லாம், நகரில் வாழும் கணவன், சிற்றுாரிலிருந்து மணந்து கொண்டு வந்த தன் மனைவியை நோக்கிக் கேலியாக - விளையாட் டாக - வேடிக்கையாக அழைத்ததை நான் கேட்டிருக் கின்றேன். அதே நேரத்தில், மனைவி கணவனை நோக்கி, "நாங்கள் பட்டிக்காடாய் இருந்தால் போகிறது . நீங்கள் தான் ட்வுன்காரராயிருங்களேன். நீங்கள் சாப்பிடும் உணவு தானியங்கள் நாட்டுப் புறத்திலிருந்துதான் வந்தாக வேண்டும் - இல்லாவிட்டால் தெரியும் உங்கள் நகர வாழ்க்கை' - என்று கூறியதையும் செவியுற்றிருக்கிறேன். 'நெல்லு காய்ச்சி மரம் (நெற்பயிர்) அறியாதார் சிலரும் உள்ள நகரங்களில் இப்போது நாட்டுப் புற இயலுக்குக் "கிராக்கி ஏற்பட்டிருக்கிறது; நாட்டுப் புற இயல் பல்கலைக் கழகப் பாடமாகவும் ஆராய்ச்சிப் பட்டத்திற்கு உரிய ஆய்வுப் பொருளாகவும் ஆட்சி புரிகிறது. சிற்றுார் (கிராமத்து) மக்களையும் அவர்தம் பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் இழிவாக எண்ணிய நகர மாந்தர் பலர், தாம் எண்ணி வந்த இழிவு நிலையை இப்போது ஒரு கலையாக மதிக்கத் தொடங்கி விட்டனர். அது குறித்துக் கட்டுரைகளும் நூல்களும் எழுதுதலும் கருத்தரங்கு நடத்துதலும் ஆராய்ச்சி செய்தலும் இன்று நடைபெற்று வருகின்றன.