பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் குழு ஒப்பந்தம் 43 பெயர் சொல்லி அழைக்காமல், தம்மினும் வயதில் பெரி யவரை, என்ன மூத்தவரே - என்ன இளையவரே . என்ன நடுவிலவரே என்றும், தம்மினும் வயதில் சிறியவரை, ‘என்ன மூத்தவனே - என்ன இளையவனே - என்ன நடுவி லவனே என்றும் குறிப்பிடுவது ஒருவகைச் சொல்லின்ப மாகும். நகர்ப்புறங்களில் ஒருவர் மற்றொருவரைக் காணி அவர் வீட்டிற்குச் சென்றால், தெரு வாயில் கதவு திறந் திருந்தாலும் உள்ளே நேரே போவதில்லை; கதவருகில் நின்றுகொண்டு சார்-சார் (Sir-Sir) என்றோ, மொசியே. மொசியே (Monsieur-Monsieur) என்றோ கூவிக்கொண்டு கதவை மெல்லத் தட்டுவர். அழைப்புமணி (Calling Bell) இருப்பின், அதன் பொத்தானை அழுத்துவர். உள்ளே இருப்பவர் மிக-மிக-மிக-மிகப் பெரிய மனிதரா யிருப்பின், 'ஐயா வேலையாயிருக்கிறார்-ஐயா தூங்குகிறார்-இப்போது பார்க்க முடியாது.அப்புற்ம் வாருங்கள் என்ற பதில் வந்தா லும் வரலாம். நடுத்தரப் பெரிய மனிதராயிருப்பவர், தெருவாயிற்படி வரையும் வந்து தெருக் குறட்டிலேயே நிற்கவைத்துப் பேசி அனுப்புவதும் உண்டு; அல்லது அந்தப் பெரிய மனிதருக்குக் கால் நோகுமென்றால், வந்தவரைத் தெருத் திண்ணையில் அமரச்செய்து தாமும் அமர்ந்து கொண்டு பேசி அனுப்புவதும் உண்டு. சிறிய பெரிய மனித ராயிருந்தால், தெருக் கதவிற்கு உள்ளே நடையிலோ அல்லது அதற்கும் உள்ளே தாழ்வாரத்திலோ அமரவைத்துப் பேசி அனுப்புவதுண்டு. சமமானவராயின், நடுக்கூடத்தில் நாற்காலியில் அமர்வித்துப் பேசுவதுண்டு. இவையெல்லாம் நகர்ப்புற நவ நாகரிகங்கள் ஆகும். நாட்டுப்புறங்களில் இந்த நிலைமையைக் காண முடி யாது. ஒருவர் மற்றொருவர் வீட்டிற்குள் நேரே நுழைந்து,