பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மக்கள்குழு ஒப்பந்தம் "என்ன மூத்தவரே-என்ன இளையவரே.என்ன செய்கிறாய். என்று குரல் கொடுத்துக் கொண்டே மூத்தவரோ-இளைய வரோ இருக்கும் இடத்திற்கு நேரே சென்றுவிடுவார். மூத்தவரும் இளையவரும், வந்தவரை, வாடாதம்பி - வாப்பா, வா மூத்தவரே-வா இளையவனே என்று சொல்லி உட்கார்ந்தபடியே வரவேற்பார். இப்படி ஒருவர் மற்றொ ருவர் வீட்டிற்குள் செல்வது அடுப்பங்கரை வரையில் இருக் கும். என்ன நடுவிலவரே - சாப்பிடுகிறாயா?’ என்று கேட்டுக்கொண்டே அடுப்பங்கரைக்குள் நுழைந்துவிடுவார். சிலர் மூத்தவரிடமோ - இளையவரிடமோ வெற்றிலை கேட்பதே ஒரு தனிக்கலை; மூத்தவரே அரைக்கோடு வெற்றிலை கொடு என்பார். ஒருகோடு என்றால் முழு வெற்றிலை; அரைக்கோடு என்றால் அரை வெற்றிலை, வந்தவர் மூத்தவரிடம் முழு வெற்றிலை கேட்காமல் பாதி வெற்றிலை மட்டும் கேட்பது, மூத்தவருக்கு மிகுந்த தொல்லை தரக் கூடாது.செலவு வைக்கக் கூடாது என்ற பரந்த நோக்கத்தால் அன்று; வந்தவர் எப்பொழுதுமே ஒரு தடவையில் பாதி வெற்றிலைக்குமேல் போட்டுக் கொள்ளும் பழக்கம் கிடையாது. முத்தவரும் முழு வெற்றி லையைப் பாதிப் பாதியாகக் கிழித்துத்தான் வைத்திருப். பார். இன்னும், ஒரு வாய்க்கு நாலாவது கொடு என்று கேட்பதும் உண்டு. நாலாவது என்பது, வெற்றிலை-பாக்கு. சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் வாய்க்குள் போட்டுக் கொண்ட பின்பு நாலாவதாகப் போட்டுக்கொள்ளும் வாய்ப் புகையிலையாகும். நீங்கள் வாங்கள் . போங்கள் எனச் சிறப்புப் பன்மை இராது. நீ.வா.போ என ஏக வசனம்’ எனப்படும் ஒருமை வழக்காறே இருக்கும். இவையெல்லாம் ஒருவகைக் கிராமப் பாங்கு ஆகும்.