பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மக்கள்குழு ஒப்பந்தம் சட்டை என்று சொல்லாமல் சொக்கா’ என்று சொல்லும் பழக்கம் இன்னமும் இருக்கிறது. கலைகள் : கிராமத்துச் சிறு கைத்தொழில் ஒவ்வொன்றும் ஒரு கலையாக ஆராய்ச்சியாளரால் இன்று மதிக்கப் பெறுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தொழிலுக்கும் உரிய கலைஞர்கள் இருப்பர். பூசாரி, புரோகிதர், சலவையாளர், முடி திருத்துவோர், தச்சர், பொற்கொல்லர், கருமார், மருத்துவர், குயவர் முதலிய தொழிற்கலைஞர்கள் இருப்பர். சில ஊர்களில் நெசவாளரும் உண்டு. எல்லா ஊர்களிலும் உழவர்கள் உளர் என்று சொல்லத் தேவையில்லை. உழவுத் தொழிலில் ஆண்டான் - அடிமை முறை முன்பு மிகுதியாக இருந்தது; இப்போது குறைவு. ஏன் - நகரங்களிலும், அரசு அலுவலர்களுள் மேலாளர், கீழாளர்களின் குடுமிகளைப் பிடித்துக் குலுக்குவது இருக்கத்தானே செய்கிறது! தெருக்கூத்து, துணங்கைக் கூத்து, வெறியாட்டு, கரகம், சிலம்பம், கும்மி, கோலாட்டம், பொய்க்கால் குதிரை முதலிய கலைகளின் பிறப்பிடம் நாட்டுப் புறங்களே. மேடை நாடகங்களும் (டிராமா) திரை ஒவியங்களும் (சினிமா) தோன்றியும், தெருக் கூத்துகளும் கண்ணைமூஞ்சைக் காட்டிக் கொண்டுதான் உள்ளன. கிராம மக்க ளிடமிருந்தும் மலை காடுவாழ் பழங்குடிமக்களிடமிருந்தும் பிறந்த பல்வகைத் தொழில் பாடல்களும். நாடோடிப் பாடல்களும் நகரத்தார் பலர் அறியாதவை. நாட்டுப் புறங்களிலே நடைபெறும் விளையாட்டுகள் பல, நகரங் களின் தார் போட்ட பாதைப் பகுதிகளில் நடைபெற முடியாதனவாகும். நாட்டுப்புற விளையாட்டுகள் நகரத் தார் பலருக்குத் தெரியமாட்டா. ஆனால், நகரங்களில் நடைபெறும் புதுவகைப் பந்தாட்டங்கள் சில, நாட்டுப் புறங்களிலும் நடைபெறத் தொடங்கியுள்ளன.