பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 47 பரிமாற்றம் : "அண்டத்தில் உள்ளவை பிண்டத்திலும் உள்ளன' என்பதுபோல, இக்காலத்தில், நகர்ப்புறத்தில் உள்ளவை நாட்டுப் புறத்திலும், நாட்டுப் புறத்தில் உள்ளவை நகர்ப் புறத்திலும் பரிமாற்றம் பெறுகின்றன. இன்னும் சில பல ஆண்டுகளில் இரு வேறிடங்களும் ஒன்றுபோல் ஆகிவிடலாம். நாகரிக வளர்ச்சியும் அறிவியல் முன்னேற்றமும் பொருளா தார உயர்வும் இன்ன பிறவும் இதற்குத் துணை புரியும். மற்றுமொரு வேற்றுமையும் மறையலாம். அதாவது, நாட்டுப் புறம் என்பது சொத்த நாட்டு உணர்வாகிய தேசியம் சார்ந்ததென்றும், நகர்ப்புறம் என்பது அயல் நாட்டு இறக்குமதி நாகரிகம் சார்ந்ததென்றும் எண்ணக் கூடிய மாறுபட்ட நிலைமை மறைந்து இரண்டும் நெருங்கி வந்து ஒன்றுபோல் ஆகலாம். . . என்ன இருந்தாலும், இன்னும் நாட்டுப் புறத்தில் ஒரு சார் மக்களிடையே காணப்படும் “தே’ என்னும் வழக்காறு மறையவில்லை. ஆண் பெண்ணை நோக்கியோ . பெண் ஆணை நோக்கியோ, 'ஏன் தே. என்ன தே-எப்போ தே வந்தே எப்பொ தே கொடுப்பேட்-என்னும் தே வழக்காறு, இனி நாளடைவில் மறையலாம். இதுபோல் இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். ஆராய்ச்சிப் பயன்: சரி. நாட்டுப் புற ஆராய்ச்சியின் முற்ற முடிந்த பயன் எதுவாக இருக்க வேண்டுமெனில், இரு வேறு இடங்களும் எல்லா வாய்ப்பு வசதிகளையும் பெற்றுச் சமமான மகிழ்ச்சி யுடன் வாழக் கூடிய வளர்ச்சி நிலைதான். இதற்கு, நகர்ப் புறப் படிப்பாளிகள் - செல்வர்கள் ஆகியோரின் உதவி ஒத்துழைப்பு மிகவும் வேண்டும். -