பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மக்கள்குழு ஒப்பந்தம் நாட்டுப் புறத்தினரை நகர்ப் புறத்தினர் மட்டமாக மதித்துக் கேலி செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. பாதையில் செல்லும் மாட்டு வண்டிக்காரரை, பேருந்து (பஸ்) ஒட்டுபவர் மட்டமாகத் திட்டுவதைக் கேட்கலாம். இதுபோன்ற நிலைமைகள் மாற வேண்டும். மருத்துவர் (டாக்டர்) போன்ற படிப்பாளிகள் - அரசு அலுவலர்கள். ஆகியோருள் சிலர், கிராமப் புறங்கட்குச் சென்று பணி புரியத் தயங்குகின்றனர். இதற்கும் முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும். தொழில் துறைகட்குச் செல்வர்கள், துணைபுரிய வேண்டும். மக்களுக்குப் போதுமான கல்வி யறிவு நல்க வேண்டும். மற்றும் புத்துலகச் செய்திகளை நாட்டுப் புறத்தினர் புரிந்துகொண்டு செயல்படச் செய்ய வேண்டும். நாட்டுப் புற இயலை ஆய்ந்து எழுதப்படும் சில நூல்கள், ஒரு வகைக் கடினமான அறிவியல் நூல்களைப் போல், புரிந்து கொள்ள முடியாத சொற்களாலும் வாக்கியங்களாலும் கருத்துகளாலும் அமைந்துள்ளமை வியப்பாயிருக்கிறது. இந்த நூல்களும் எளிமைப் படுத்தப் படவேண்டும். இனி, ‘தே நாட்டுப் புறம்' என்னும் வழக்காற்றிற்கு இடம் இல்லாதபடி, நகர்ப்புற இயலோடு நன்முறையில் ஒத்து நாட்டுப் புற இயலும் வளர்க . வாழ்க ! குறிப்பு : இந்தக் கட்டுரை, நாட்டுப்புற இயல் தொடர்பான எந்த ஒரு தலைப்பையும் சிறப்பாக எடுத்துக் கொள்ளாமல் பொதுவாக எழுதப்பட்டுள்ளது - ஆசிரியர்.