பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பாடலி புத்திரமும் பாதிரிப்புலியூரும் 'பாடலி புத்திரம்' என்னும் ஊர் ஒன்று இருந்ததாகப் பெரியபுராணத்தால் தெரிய வருகிறது. பாடலம்' என்றால் பாதிரி; பாடலி புத்திரம் என்றால் பாதிரி மரம் நிறைந்த இடம்: எனவே, திருப்பாதிரிப் புலியூரைக் குறிக்கும் வட மொழிப் பெய்ர்தான் பாடலி புத்திரம்' எனப் பலரும் கூறு கின்றனர். பாடலி புத்திரமும் திருப்பாதிரிப் புலியூரும் ஒன்றா? அல்லது வெவ்வேறா? இந்த ஐய வினாவிற்குப் பெரிய புராணத்திலேயே விடை இருக்கிறது. இந்த இரண்டு இடப் பெயர்களையும் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் தனித்தனிச் சூழ்நிலையில் தனித்தனியாகக் கூறியுள்ளார். இதைக் கொண்டே இரண்டையும் வெவ்வே றாகத் துணியலாம். திருவாமூரில் திலகவதியாரின் தம்பியாகப் பிறந்த திருநாவுக்கரசர் இளமையில் பெற்றோரை இழந்தபின், பாடலிபுத்திரம் என்னும் ஊரையடைந்து சமண மதத்தில் சேர்ந்து பெரிய தலைவராகத் திகழ்ந்தார். இதனைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பின்வருமாறு விவரிக் கிறார்: * பாடலிபுத் திரமென்னும் பதிஅணைந்து சமன்பள்ளி மாடணைந்தார் வல்லமணர் மருங்கணைந்து மற்றவர்க்கு வீடறியும் நெறிஇதுவே எனமெய்போல் தங்களுடன் கூடவரும் உணர்வுகொளக் குறிபலவும் கொளுவினார்”

  • பெரியபுராணம்-திருநாவுக்கரசர் - 38, 39 40.