பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 55 " அங்கவரும் அமண்சமயத் தருங்கலைநூ லான வெலாம் பொங்குமுணர் வுறப்பயின்றே அந்நெறியிற் புலன் - சிறப்பத் துங்கமுழு உடற்சமணர் சூழ்ந்துமகிழ் வாரவர்க்குத் தங்களின் மே லாந்தரும சேனர் எனும் பெயர்கொடுத்தார்” ' அத்துறையின் மீக்கூரும் அமைதியினால் அகலிடத்தில் சித்தநிலை அறியாத தேரரையும் வாதின்கண் உய்த்த உணர் வினில்வென்றே உலகின்கண் ஒளியுடைய வித்தகராய் அமண்சமயத் தலைமையினில் மேம்பட்டார்”. மேலே முதல் பாடலின் தொடக்கத்திலுள்ள பாடலி புத்திரம் என்னும் பதி' என்னும் தொடரைக் காணுங்கால், பாடலி புத்திரம் ஒரு தனி ஊராக இருந்தமை புலனாகும். மற்றும், அங்கே சமணமதத் தலைமையகம் இருந்தமையும், அங்கே சமணமதக் கலைகள் பல பயிற்றப் பட்டமையும், திருநாவுக்கரசர் தருமசேனர்’ என்னும் தலைமைப் பட்டப் பெயருடன் தலைமை தாங்கியிருந்தமையும் பாடல்களால் அறியப்படுகின்றன. பாடலிபுத்திரத்தில் சமணமதத்தின் தலைமையகம் ஒன்று இருந்ததென்றால், அங்கே பல கலைகள் பயிற்றப்பட்டன என்றால், அங்கே பெருந் தலைவர் ஒருவர் தலைமை தாங்கியிருந்தார் என்றால், அப் பாடலிபுத்திரம் ஒரு சிற்றுாராக இருந்திருக்க முடியாது; ஒரு பேரூராகவே இருந்திருக்க வேண்டும். சமண நூல்களைக் கொண்டு பார்க்கும் போதும், பாடலிபுத்திரம் அன்று பெற்றிருந்த பெருமை புலனாகிறது. இவ்வூர் மூன்றாம் நூற்றாண்டிலேயே சமணர்களின் சிறப் பிடமாய்த் திகழ்ந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் சிம்மசூரி, சரவ நந்தி முதலிய சமணப் பெரியார்கள் இங்கே தங்கி யிருந்தனர். சரவ நந்தியானவர் சிம்ம நந்தியின் உலோக