பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மக்கள்குழு ஒப்பந்தம் விபாகத்தைப் புகழ்ந்து நூல் எழுதியது பாடலிபுத்திரத்தில் தான்! ஏழாம் நூற்றாண்டு வரையும் பாடலிபுத்திரம் மிகச் சிறப்புற்றிருந்தது. இங்கே சமணர்க்குத் தலைமை தாங்கியிருந்த நாவுக் கரசருக்குச் சூலைநோய் உண்டாக, அவர் தம் தமக்கை திலகவதியாரின் தூண்டுதலால் சமணர்க்குத் தெரியாமல் இரவோடிரவாகப் பாடலிபுத்திரத்தினின்றும் புறப்பட்டுத் திருவதிகை போய்ச் சேர்ந்தார். இதனைச் சேக்கிழார்,

  • பொய் தருமால் உள்ளத்துப் புன்சமணர் இடங்கழிந்து மெய் தருவான் நெறியடைவார்

வெண் புடைவை மெய்சூழ்ந்து கைதருவார் தமையூன்றிக் காணாமே இரவின்கண் செய்தமா தவர்வாழுந் திருவதிகை சென்றடைவார்” என்னும் பாடலில் தெரிவித்துள்ளார். இப் பாடலில் ‘சமணர் இடம்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பாடலி புத்திரமாகும். பாடலிபுத்திரத்திலிருந்து சமணர்க்குத் தெரியாமல் நாவுக்கரசர் ஒரே இரவில் திருவதிகை சென்று விட்டார் என்பது இப் பாடலால் புலனாகிறது. யாருக்கும் தெரியாமல் இரவில் புறப்படுபவர் முன்னிரவில். புறப்பட்டிருக்க முடியாது. எல்லாரும் படுத்த பிறகு இரவு பத்து அல்லது பதினொரு மணிக்கு மேல்தான் புறப்பட் டிருக்க வேண்டும். அவ்வாறு புறப்பட்டவர் விடிவதற்குள் திருவதிகையை அடைந்திருக்க வேண்டும். தெரியாமல் செல்பவர்கள் விரைவாக நடப்பது இயற்கை யென்றாலும் சூலைநோய் (வயிற்றுநோய்) கொண்டிருந்ததால் நாவுக்

  • பெரியபுராணம்-திருநாவுக்கரகர் - 6.