பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 57 கரசர் ஒரளவு மெதுவாக நடந்து சென்றிருப்பார். எனவே, ஒரு வயிற்று நோய்க்காரன் நள்ளிரவில் புறப்பட்டு விடிவதற்குள் சென்றடையக் கூடிய தொலைவிலேயே திருவதிகை இருந்தது என்பதும் இப் பாட்டிலிருந்து உய்த்துணரப்படலாம். அங்ங்னமெனில், திருதிகையிலிருந்து ஏறக்குறைய 20 கி.மீ. (12 மைல்) தொலைவில் பாடலி புத்திரம் இருந்திருக்கலாம் என்று கொள்ளலாம். இந்தக் கருத்தை நினைவில் இருத்தி அடுத்த கருத்துக்குச் செல்வோம். நாவுக்கரசர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதை யறிந்த சமணர்கள் பொறாது துடிப்பதைச் சேக்கிழார் பின்வரும் பாடலால் தெரிவிக்கிறார்:

  • இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை எய்தி

மன்னு பேரருள் பெற்றிடர் நீங்கிய வண்ணம் பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரில் புன்மையேபுரி அமணர்தாம்கேட்டது போறாராய்”. இப்பாடலிலுள்ள 'தொன்மையின் பாடலிபுத்திரநகர்’ என்னும் பகுதியால், பாடலிபுத்திரம் மிகவும் தொன்மை வாய்ந்தது எனவும், ஒரு நகரம் எனவும் அறியலாம். நாவுக்கரசருக்குப் பல தொல்லைகள் தந்த சமணர்கள் இறுதியாக அவரைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட் டனர். அவர் தப்பித்துக் கொண்டு திருப்பாதிரிப்புலியூர்ப் பக்கத்தில் கரையேறினார்; பின்னர்த் திருப்பாதிரிப்புலியூரை அடைந்து சிவபெருமானை வழிபட்டார் என்று சேக்கிழார் பாடியுள்ளார்; பாடல்கள்: * . . . 1 : வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச் சேர்ந்தட்ை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன் பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்” * பெரியபுராணம்-திருநாவுக்கரசர் - 79. — 131, 133. § 3. 3 3