பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மக்கள்குழு ஒப்பந்தம் சமணத்தைப் பற்றி அவருக்குத் தெரியாது. அழிந்து போன கோயில் குடிக்காடு இந்த்ப் பகுதியில் எங்கே யிருந்தது என்று நான் கேட்டதற்கு, முதியவர் நெடும் பாதையின் வடக்குப்புறமாகக் கையை நீட்டிக் காட்டினார். இந்த உரையாடல் நமது கருத்துக்கு ஓரளவு துணை புரிகிறது. (4) பாதிரிக் குப்பத்திற்கு மேற்கே ஒரு கி. மீ. தொலைவில் நெடும்பாதையில் குமரப்ப நாய்க்கன் பேட்டை என்னும் சிற்றுர் உள்ளது. இவ்வூரின் முகப்பில் பாதையோரம் வடபுறமுள்ள ஒரு சத்திரத் தோட்டத்தில் ஒரு சமணச்சிலை மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இது குமரப்ப நாய்க்கன் பேட்டை யில் இருப்பதால் இதனைப் பேட்டைக் கல்’ என்று. சுற்றுவட்டாரத்து மக்கள் அழைக்கின்றனர். மேற்கே சில கி. மீ. தொலைவில் வயலைக் கொத்தி உழுத போது இந்தச் சிலை கண்டுபிடிக்கப் பட்டதாகச் சொல்லப் படுகிறது. இது சமணச் சிலையேதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்தச் சூழ்நிலையை வைத்துக் காணுங்கால், இந்த வட்டாரத்தில் ஒரு காலத்தில் சமண சமயம் தழைத்துச் செழித்திருந்தமை புலனாகும். மேற்கூறிய சான்றுகளைக் கொண்டு, பாதிரிக்குப்பம் இருக்கும் பகுதியில் பழைய பாடலிபுத்திரம் இருந்திருக்கக் கூடும் என்றும், பாடலி புத்திரம் வேறு-பாதிரிப்புலியூர் வேறு என்றும் உய்த்துணரலாம். உண்மை இங்ங்ணமிருக்க இரண்டையும் ஒன்றென ஆராய்ச்சியாளர்கள் கொண்ட தற்குக் காரணம், இரண்டும் பக்கத்தில்-பக்கத்தில் இருந்தமையே! மற்றும், பாடலிபுத்திரம் ஒரு பெருநகரமாக இலக்கியங்களில் படைத்துக் காட்டப்பட்டிருப்பதாலும் - திருப்பாதிரிப் புலியூர் இன்று ஒரு பெருநகரமாகத் திகழ்