பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 65 வதாலும் . அந்த நகரம் இந்த நகரமாகத்தான் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் மயங்கிவிட்டனர். இன்றைய ஆராய்ச்சியாளரையும் அணைத்துக் கொள்ளும் முறையில் இந்தச் சிக்கலுக்குப் பின்வருமாறு கூறித் தீர்வு காணலாம். பண்டு பாடலிபுத்திரமும் பாதிரிப்புலியூரும் இரட்டை நகரங்களாகத் திகழ்ந்தன என்பதுதான் அந்தத் தீர்வு! பாட்னா - பாடலி புத்திரம் பாடலிபுத்திரம் என்றதும், ஆராய்ச்சியாளர் பலர்க்கும் மற்றும் ஒர் ஊர் நினைவிற்கு வரும். இன்று பீகார் மாநிலத்தின் தலைநகராயிருக்கும் பாட்னா அன்று பாடலி புத்திரம் என அழைக்கப்பட்டது. பாட்னா அகழ்வாராய்ச்சி. களிலிருந்து, பழைய பாட்னா-பாடலிபுத்திரத்தின் சிறப்பு கள் புலனாகியுள்ளன. அப் பாடலிபுத்திரம், கி. மு. முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் கி.பி. முதல் ஆறு நூற்றாண்டு களிலுமாக 900 ஆண்டுகாலம் மிகவும் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. கி. மு. 320 தொட்டு கி.மு. 185 வரை மெளரியர் ஆட்சியிலும், கி. மு. 185 தொட்டு கி.மு. 73 வரை கங்கர் ஆட்சியிலும், கி. பி. 320 முதல் கி.பி. 600 வரை குப்தர் ஆட்சியிலும் பெரும் புகழ் பெற்று விளங்கியது. இந்தப் பாடலி புத்திரம் பாடலி’ என்னும் பெயரில் தமிழ் நூல்களிலும் புகழப்பட்டுள்ளது. படுமரத்து மோசி கீரனார் குறுந்தொகைப் (75) பாடலில், ' வெண்கோட் டியானை சோணை படியும் பொன்மலி பாடலி பெறீஇயர்" எனவும், மாமூலனார் அகநானுள் ற்றுப் (265) பாடலில்,