பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மக்கள்குழு ஒப்பந்தம் ' பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் சீர்மிகு பாடலிக் குழிஇக் கங்கை நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ' எனவும், கொங்குவேளிர் பெருங்கதைப் (1-58 : 42) பாடலில், பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞர்" எனவும் பாடலியைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இப் புலவர் கள் பாடலி என்று வடநாட்டுப் பாடலிபுத்திரத்தையே குறிப்பிட்டுள்ளனர். பாடலி சோணையாற்றங் கரையில் இருப்பதாகப் படுமரத்து மோசி கீரனாரும், கங்கைக்கரை யில் இருப்பதாக மாமூலனாரும் கூறியுள்ளனர். இவ்வூருக்கு அருகில் சோணையும் கங்கையும் ஒன்றுகூடுகின்றன. ஆதலின் இவ்வாறு இருவேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. இது பாடலிபுரம் எனவும் அழைக்கப்படும். பழைய மகத நாட்டின் தலைநகராகப் பாடலிபுத்திரம் விளங்கியது. இப்போதிருக்கும் பாட்னாவுக்கு அருகில் இஃது இருந்திருக் கக்கூடும் என உய்த்துணரப் படுகிறது. வடக்கே பாட்னா-பாடலிபுத்திரம் சிறப்புற்றுத் திகழ்ந் ததைப் போலத் தெற்கே திருப்பாதிரிப்புலியூர் சிறப்புற்றுத் திகழ்ந்ததால், இவ்வூரும் முகமனாகப் பாடலிபுத்திரம் என அழைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர் சிலர் அறிவிக் கின்றனர். வடக்கே வடமதுரை இருப்பதுபோலத் தெற்கே யும் மதுரை இருக்கிறது. வடக்கே காசி இருப்பதுபோலத் தெற்கேயும் தென்காசி இருக்கிறது. அங்கே வடகைலாசம் போல இங்கே தென்கைலாசம் இருக்கிறது. இவ்வாறே அங்கும் இங்கும் பாடலிபுத்திரங்கள் இருந்தன என்பது அவ்வாராய்ச்சியாளர்களின் கருத்து. மற்றும், சமணசமயம் வடக்கேயிருந்து தெற்குக்கு வந்தது என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. வடக்கேயிருந்து வந்த சமணர்கள்