பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 67 அங்கேயிருந்து பாடலிபுத்திரத்தையும் இங்கே கொண்டு வந்து விட்டார்கள். இந்தப் பெயர் வழக்கு, சப்பான் நாட்டை ஆசியாவின் பிரிட்டன்’ என்றும், பம்பாயைக் 'கிழக்கிந்திய இலண்டன்’ என்றும், கோயமுத்துரைத் 'தென்னகத்தின் மான்செஸ்டர்' என்றும், இந்தக் காலத் தில் அழைப்பது போன்றதாகும். இன்னும் கேட்டால், பாடலிபுத்திரம் என்னும் பெயர் பாட்னா - பாடலிபுத் திரத்தைக் காட்டிலும் கடலூர்ப் பாடலிபுத்திரத்திற்கே மிகவும் பொருந்தும் என்று பன்மொழிப் புலவர் டாக்டர் சுநீதிகுமார் சாட்டர்ஜி என்னும் வங்காளப் பெரியார் அழுத்தம் திருத்தமாகச் சான்றுகள் காட்டி அடித்துக் கூறி யிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இஃதன்றி, பாடலிபுத்திரம் என்னும் பெயர் வடக்கே யிருந்து தெற்கே இறக்குமதியானதைப் போலவே, அப் பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த மகத தேசம்’ என்னும் நாட்டின் பெயரும் தெற்கே இறக்குமதி யாகி யிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஃதாவது, கடலூர்ப்-பாடலிபுத்திரம் இருந்த திருமுனைப்பாடி நாடும் மகதநாடு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டதை ஈண்டு நினைவுகூர வேண்டும். வடக்கே பாடலிபுத்திரம் அழிந்துவிட்டதைப்போலவே தெற்கேயும் பாடலிபுத்திரம் அழிந்துவிட்டது. வடக்கே பாட்னா பகுதியை அகழ்ந்து ஆராய்ந்தது போலவே, தெற்கே கடலூர்ப் -பாதிரிக்குப்பம் பகுதியை அகழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் எத்தனையோ உண்மைகள் தெரிய வரலாம்.