பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 71 நேரிடலாம் என்று சொல்லிப் பார்த்தார்களாம். அப். போதும் கவிஞர் எழுந்து செல்லாமல் 'ஆணி அடித்துக் கொண்டு - வேர் பாய்ந்து அதே இடத்தில் அமர்ந்திருந்'. தாராம். சிறுது நேரத்தில் துரை தம் மனைவியை அழைத்துக் கொண்டு வந்து கவிஞரைச் சுட்டிக்காட்டிப் பின், வருமாறு கூறினாராம்: இதோ பார் இவரை! கதர் ஆடையும் கதர்க் குல்லாவும் அணியக் கூடாது; அணிந்தால் வேலை போய்விடும்-என்று நாம் விதி செய்துள்ளோம். அப்படியிருந்தும், இவர் எதற்கும் அஞ்சாமல், கதர் உடை யுடன் என் எதிரிலேயே வந்திருக்கிறார். இவருடைய உறுதியான துணிவையும் நாட்டுப் பற்றையும் பார்!" இப்படியொரு நாட்டுப்பற்றுடையவராய் இருப்பார் என்று. நான் எதிர்பார்க்கவேயில்லை - என்று தம் மனைவியிடம் கூறிக் கவிஞரை மெச்சினாராம். அதன் பிறகு தான் ஆசிரியர்கள் அச்சம் நீங்கி மூச்சு விட்டார்களாம். இங்கே நாம், கவிஞரின் உறுதியான நாட்டுப் பற்றைப் பெரிதும் வியப்பதா? அல்லது கல்வித்துறைத் தலைவரின் பெருந்தன்மையைப் பெரிதும் வியப்பதா? ஒன்றும் புரிய வில்லையே! சரி - இருவரையுமே வியப்போம். பாடல் சிறப்பு : அடுத்து, பாவேந்தரின் பாடல் சிறப்பு ஒன்றினைப் பார்ப்போம் : 1973-ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடை பெற்ற ஒரு விழாவில் ஒர் அறிஞர் பின்வருமாறு ஒரு. கருத்து தெரிவித்தார் : வால்மீகி தம் இராமாயணி நூலில் இயற்கைக் காட்சி களைப் புனைந்துரைத்திருக்கும் அளவு, கம்பர் தம் இராமாயண நூலில் இயற்கைக் காட்சிகளைப் புனைந்,