பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 75 களும் பாரதிதாசனாரின் இப்பாடலில் அமைந்திருப்பது, மிகவும் சுவை பயக்கின்றதன்றோ! காட்டில் வாழாமலேயே, அழகின் சிரிப்பு’ என்னும் நூலில் இயற்கையைப் புனைந்திருக்கும் பாவேந்தர் பாரதி தாசனார், இந்தப் பாடலில், காட்டில் அன்று-ஒரு வெட்ட வெளியில் உள்ள குட்டைப் பனைமரத்தையும் கூந்தல் சரிந்த ஈந்தையும் மூலதனமாக வைத்துக் கொண்டே சுவை ததும்பும் இயற்கைப் புனைவு செய்துள்ளார். இனிய இந்தப் பாடல், கவிஞரின் இரண்டாம் கவிதைத் தொகுப்பில் 'மாவலிபுரச் செலவு’ என்னும் தலைப்பில் உள்ள பத்துப் பாடல்களுள் ஐந்தாம் பாடலாகும். அந்தப் பத்துப் பாடல்களையும் படிக்கின், கவிஞரின் இலக்கியச் சிறப்புக்கு வேறொன்றும் சான்று தேட வேண்டியிராது. அவ்வளவு சிறந்த கற்பனைகளும் உவமைகளும் தற்குறிப் பேற்றமும் சமுதாய மறுமலர்ச்சிக் கருத்துகளும் அப்பாடல் களில் பொதிந்துள்ளன. "ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல், கவிஞரின் சிறந்த வாழ்க்கை நடைமுறைக்கு ஒரு செயலும், பாடல் சிறப்புக்கு ஒரு பாடலும் இங்கே தரப் பெற்றுள்ளன. பானைச் சோற்றையும் மாந்துவோமாயின் மகிழ்ச்சிக்கு அளவே இராது.