பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 77 யலைகின்றனர்; அவர்கட்கு வேண்டிய வசதியும் செய்கின் றனர். எத்துணைப் புகழ்ப் பித்து! இவ்வளவுக்கும் இப் புகழ்ப் பித்தர்கள் ஆற்றியுள்ள அருஞ்செயல்கள் என்னென்னவாக இருக்கக் கூடும்? பிறரை மிகுதியாகத் திட்டியிருப்பார்கள் - அடித்திருப் பார்கள் - அடிதடி வழக்கில் வெற்றிபெற்றிருப்பார்கள் - அல்லது நன்றாக விளையாடியிருப்பார்கள் -திறமையாகப் படித்திருப்பார்கள் - பலவகைப் போட்டிகளில் பரிசுபெற் றிருப்பார்கள். அல்லது, மிகுதியாகப் பணம் சேர்த்திருப் பார்கள் - பட்டம் பதவிகள் பல பெற்றிருப்பார்கள் - பலருக்குத் தலைமை தாங்குவார்கள். அல்லது, மிடுக்காக உண்டு உடுத்துச் செலவு செய்வார்கள் - ஆரவாரக் கேளிக்கைகள் பலவற்றில் ஈடுபடுவார்கள் - எப்போதும் அரச குடும்பத்தினர் போல் காட்சியளிப்பார்கள். இவர்க ளின் அருஞ்செயல்கள் (சாதனைகள்) இத்தகையனவே. அப்பப்பா ! இதற்காகவா இத்துனைப் புகழ்வேட்டை! இவற்றால் கிடைப்பது உண்மைப் புகழாகாது - வெறும் போலியே! இந்தப் போலிப் புகழுக்குத் தமிழ் மொழியில் ஒளி என்று பெயராம். தோன்றிச் சிறிது நேரம் இருந்து மறையும் ஒ வரி ைய ப் போன்றதே இந்தப் போலிப் புகழும்! செயல்செய்த அப்போது மட்டும் சிலருக்குச் சிலரால் பாராட்டுக் கிடைக்கும். சிலர் மேலும் சிறிது காலம் வரைக்கும் பாராட்டப்பெறுவர். ஒருசிலர் வேண்டுமானால் இறக்கும் வரையும் பலரால் பாராட்டப் பெறலாம். அவ்வளவுதான்! ஆனால் புகழ் என்பது இத்தகையதன்று. ஒருவர் இருக் கும் போதும்-இறந்தபின்னும்-எப்போதும் எல்லோராலும் பாராட்டப்பெறுவதற்குத்தான் புகழ் என்று பெயராம்.