பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மக்கள்குழு ஒப்பந்தம் அது இருக்கட்டும். இதற்கு முன் மங்களத்தின் பெற்றோர் அவளை வெளியில் அனுப்பவில்லை. ஆண்க ளுடன் பேச விடவில்லை. முதலில் பெண் கேட்டவருக்குக் கொடுக்கவில்லை. பிறகு அவர்களுக்கே அக்கறை ஏற்பட் டது. அயலான் ஒருவனுக்குக் கட்டிக் கொடுத்தார்கள்; சீர்வரிசையும் செய்தார்கள். இதன் காரணம் என்ன; இங்கே ஓர் உண்மை இருக்கிறது. நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கண்டுபிடிக்கத் துணைக்கு இதுபோல் இன்னும் ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போம்: சாத்தூர் ஒரு சின்ன ஊர். சாமிநாதன் அந்த ஊருக்கே பெரிய மனிதர்; பெரிய பணக்காரர். அவருடைய ஒரே மகன் ஆறுமுகம் என்பவன். செல்வரின் ஒரேமகன் செல்லப் பிள்ளைதானே! "ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என்று பழமொழி சொல்வார்களே! r சாமிநாதன் எப்போது பார்த்தாலும் மகனோடு கொஞ்சிக் கொண்டே இருப்பார்; முத்தம் கொடுக்கச் சொல்லி அவனை அடிக்கடி தொந்தரவு பண்ணுவார். அவன் சில நேரம் கொடுப்பான் - சில நேரம் கொடுக்க மாட்டான். தராவிட்டால் விடுவாரா? இவர் முத்தம் கொடுக்கிறேன் என்று அவன் கன்னத்தைப் பிய்த்து இழுத்து விடுவார். பையனுக்குப் போதும் போதும் என்றாகிவிடும். சாமிநாதன் மகனை அடிக்கவே மாட்டார்; திட்டவும் மாட்டார். யாராவது தெருப்பிள்ளைகள் அடித்துவிட்டால் அவர்களை நொறுக்கி விடுவார். ஒருநாள் இவர் மகனை அண்டை வீட்டு அப்பாவி அடித்துவிட்டான். அவன்மேல் இவர் வழக்குப் போட்டுவிட்டார். அப்பாடா! மகன் மேல் எவ்வளவு உயிர்! .