பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 மக்கள்குழு ஒப்பந்தம் உலகில் சிலர் புகழான செயல்களின் பக்கம் தலை வைத்தும் படுக்காமல் இழிவான செயல்களிலேயே நூற்றுக்கு நூறு இறங்கி விடுகின்றனர். அதனால் இவர்களை உல கினர் இகழ்கின்றனர். அதற்காக இவர்கள் தம்மை இகழ் கின்றவரை நோகின்றார்கள்! இது தேவையில்லையே! புகழ்ச் செயல் புரிபவரை உலகம் புகழத் தவறாது. அது போலவே, இகழ்ச் செயல் புரிபவரையும் உலகம் இகழத் தவறவே தவறாது. இந்த உலகியற்கையை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே, இழிசெயல் புரிபவர்கள் தம்மை இகழ்பவரை நோகாமல், அவ்விகழுக்குப் பொருட்டான தங்களைத் தாங்களே நொந்துகொள்ள வேண்டும். 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே (செயலே.) கட்டளைக் கல்' (உரைகல்) அல்லவா? பெருமை யும் சிறுமையும் தான் தர வருமே என்பது பட்டறிந்த முதுமொழி யாயிற்றே! இங்கே சிலர், நாங்க ள் என்ன இழிசெயல் செய்தோம்? கள், களவு, காமம், பொய், சூது, கொலை, கொள்ளை முதலிய குற்றங்களுள் எக்குற்றம் புரிந்தோம்? ஒன்றும் இல்லையே! யாருக்கும் எத்தீங்கும் செய்ய வில்லையே! நாங்கள் உண்டு - எங்கள் காரியம் உண்டு என்றுதானே இருக்கிறோம்! அப்படியிருக்கவும் எங்களைப் பலர் இகழ்ந்து பழிக்கின்றார்களே! இது ஏன்? என்று கேட்கலாம். இவர்கள் இழிசெயல். ஒன்றும் செய்ய வேண்டியதில்லை; புகழான காரியம் செய்யாதிருப்பதே பெருங்குற்றமாயிற்றே! இஃது ஒன்றே போதுமே உலகம் இவர்களைப் பழிப்பதற்கு உடலாற்றலும் அறிவு நலனும் பொருள் வசதியும் பெற்றிருப்பவர்கள் உலகிற்குப் பல நல்ல பணிகள் புரிய வேணடியது கடமையாயிற்றே! உலகத்தாரின் ஒத்துழைப்பால் - கூட்டுறவால்தானே இவர்கள் வாழ்கிறார்கள்! எனவே, இவர்கள் உலகிற்கு