பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் குழு ஒப்பந்தம் 81 உதவாதிருப்பது, புகழை இழந்ததாக மட்டும் ஆகாதுஇகழை வலியத் தேடிக் கொண்டதாகவும் ஆகும். புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன் ’. " வசைஎன்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெருஅ விடின்’’. வள்ளுவனார்க்கு இங்கே கசப்பு வந்துவிட்டதுபோலும்! புகழ் இல்லாதவரது உடம்பைச் சுமந்து கொண்டிருக்கும் மண்ணால் பயனில்லை என்கிறார் ஆசிரியர். ' வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்'. புகழ் இல்லாதவரைப் பொறுத்த நிலம் என்று ஆசிரியர் சொல்லவில்லை! இசையிலா யாக்கை பொறுத்த நிலம்’ என்றே ஆசிரியர் கூறியுள்ளார். இசையிலா யாக்கை என்றால், புகழ் இல்லாத உடம்பு என்று பொருளாம். இதிலிருந்து, 'புகழ் இல்லாதவரது உடம்பில் உயிர் இல்லை - அது வெற்றுடம்பாகிய பிணமே என்பது புலனாகிற தன்றோ? மேலும், உடம்புக்கு உண்மையான உயிர் புகழ்தான் என்பதும் புலனாகுமே! எனவேதான், புகழ் பெற்றவர்களின் உடம்பு சுட்டெரிக்கப் பட்டுங்கூட, அல்லது புதைக்கப் பட்டுங்கூட புகழ் என்னும் உயிர்ப் பொருள் உலகில் உலவிக்கொண்டிருக்கிறது போலும்! இவ்வளவு அரிய கருத்துகளும், இசையிலா யாக்கை” என்னும் குறள் தொடரிலிருந்து கிடைக்கப்பெற்றன வன்றோ? இம்மட்டுமா! புகழ் இல்லாதவர்கள் இருப்பதைவிட இறப்பதே மேல்-அதனால் நிலத்தின் சுமை குறையும் என்னும் கருத்தும் இதிலிருந்து கிடைக் கின்ற தல்லவா? சுமந்த நிலம் என்னாது பொறுத்த