பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 மக்கள்குழு ஒப்பந்தம் ஏன்? புகழில் ஆவல் மட்டும் இருந்தால் போதுமா? அதற்குரிய செயல் செய்ய வேண்டாவா? செய்யாமல் புகழ்ந்துகொள்ள முயல்வதால் யாது பயன்?. இல்லாத புகழை இருப்பதாகப் பொய்யாய்ப் புனைந்துரையாய்ப் புகழ்ந்து கொள்ளலாமா? இன்னொருவர் புகழை - ஏன், தம் முன்னோர் புகழையே கூட இரவலாகத் தம்மேல் ஏற்றிப் புகழ்ந்து கொண்டால் போதுமா? எனவே, ஒவ் வொருவரும் தாமே புகழான செயல்கள் புரிவாராக! புரிந்து புகழோடு வாழ்வாராக!