பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 87 பொதுவாக, மக்களாட்சி, தனித் தலைவராட்சி என்னும் இரண்டிலுமுள்ள பெரியதொரு குறையை அடிப் படையாகக் கொண்டு, இவ்விரண்டினைப் பற்றியும் பின் வருமாறும் ஒருவகை விளக்கம் தரலாம். அதாவது மக்கள் ஊழல் செய்ய இடங்கொடுக்கும் ஆட்சி மக்களாட்சி; தலைவர் ஊழல் செய்ய இடந்தரும் ஆட்சி தனித் தலைவ ராட்சி - என்பது எனது பணிவான கருத்து. ஆம்! மக்க ளாட்சியில், மக்கள் புரியுந் தவறுகள் சிலவற்றைக் கடிந்து விலக்கத் தலைவர்கள் தயங்குகின்றனர்; தனித் தலைவ ராட்சியிலோ, தலைவர் புரியுங் கொடுமைகளைக் கடிந்து விலக்க மக்கள் அஞ்சுகின்றனர் - இயலாதவராயும் உள்ளனர். இந்த இரண்டு நிலைகளுக்கும் இடங் கொடுக்க வில்லை திருவள்ளுவர். இவ்விருவகைத் தீமைகளையும், இறைமாட்சி, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெரு வந்த செய்யாமை என்னும் நான்கு அதிகாரங்களிலும் கடுமையாகக் கடிந்துரைத்துள்ளார் வள்ளுவனார். ஆம்! மக்களின் வாக்குரிமையைப் பெறுவதற்காக வளைந்து கொடுத்துக்கொண்டு செல்லும் மக்களாட்சி முறையிலுள்ள ஒருவகைக் குறைபாட்டை, வள்ளுவர் காட்டிய அரசியலில் காணவே முடியாது. அவர் கூறுகிறார்: "யாராயிருப்பினும் அ வ ரி ட மு ள் ள குற்றநற்றங்களை ஆராய்ந்து, குற்றங் கண்டவழி இரக்கங் காட்டாது ஒறுக்க வேண்டும்’ என்று! ஒர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை'. என்பது குறள். இன்னும் ஈண்டு, " தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து”.