பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மக்கள்குழு ஒப்பந்தம் என்னும் குறட்பாவையும் நினைவு செய்துகொள்ள வேண்டும். இதனினும் கடுமையான கண்டிப்பான இன்னொரு கருத்தும் தெரிவித்துள்ளார் திருவள்ளுவனார். இன்றைய மக்களாட்சியில் கொலைக் குற்றவாளிகட்கு மட்டுமே சாவுத் தீர்ப்பு அதாவது மரணதண்டனை கொடுக்கப்படுகிறது. மற்ற மாபெருங் கொடுமைகளுள் எது செய்தார்க்கும் சாவுத் தீர்ப்பு கிடையாது. அவ்வளவு போவதேன்! கொலைக் குற்றவாளிகள் சிலருங்கூட சாவுத்தீர்ப்பு கொடுக்கப்படாமல், ஆயுள் தீர்ப்பு அளவில் தப்பித்துக் கொள்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், கொலை செய்தவர்க்குங்கூட சாவுத் தீர்ப்பு கொடுக்கப்படலாகாது, என்பது போன்ற கொள்கையும், இன்றைய மக்களாட்சிக் காலத்தில் சிலவிடங்களில் தலைகாட்டத் தொடங்கி யுள்ளது. இதற்கு நேர்மாறாக, சர்வாதிகாரம் எனப்படும் தனித் தலைவராட்சியிலோ, எடுத்ததற்கெல்லாம் சாவுத் தீர்ப்பு: அதாவது, தலைவருக்குப் பிடிக்காதவர்கள் தலைசீவப்படுவார்கள். இதற்காகச் சில விடங்களில் 'இராணுவ நீதிமன்றம் என்னும் நாடகம் நடைபெறும். சர்வாதிகார ஆட்சி நடைபெறும் சில விடங்களில், குற்றம் செய்யாதார் சிலரும் கொலை செய்யப்படுவது உண்மைதான் எனினும், சர்வாதிகாரம் நடைபெறும் வேறு சில இடங்களில், கொலைக் குற்றமேயன்றி வேறு உண்மை யான - உருப்படியான - கொடிய குற்றங்கள் புரிபவரும் கட்டாயம் சாவுத் தீர்ப்பு தரப்படுகிறார்கள். இந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறார் வள்ளுவர். ஆட்சித் தலைவன் கொடியவர்களைக் கொல்வது, உழவன் பயிர் களைக் கெடுக்கும் களைகளைக் களையும் நற்செயலுக்கு நேர்' என்பது திருவள்ளுவர் கருத்து.