பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 89 ' கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் . பைங்கூழ் களைகட் டதனொடு நேர்' என்பது குறட்பா. இன்றைய மக்களாட்சியில் இந்த நெறிமுறையைக் காண முடியுமா? வள்ளுவர் காலத்து மன்னராட்சியில் இது நடை பெற்றது. ' கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றங் காண்' என்று சிலம்பும் சிலம்புகிறதே! இதையேதான், ' குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில்’ என வள்ளுவர் வாய்மொழியிலும் காண்கிறோம். மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் இப்போது அறிவார்களே, வள்ளுவர் காட்டிய அரசியல் மக்களாட்சியின் அடிப்படை யில் அமைந்ததா? அல்லது அதனினும் மாறானதோர் ஆட்சியின் அடிப்படையில் அமைந்ததா என்று! மற்றும், ' இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’. . " காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல் மீக்கூறும் மன்ன னிலம்”. " இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு". - " செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு". ' குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழிஇ நிற்கும் உலகு".